Header Logo
Mogo Academy

செய்திகள்
கிளிநொச்சியில் சோதனையில் ஈடுபட்ட STF அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Jul 25, 2026 - 04:58 PM -

0

கிளிநொச்சியில் சோதனையில் ஈடுபட்ட STF அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
Mobitel inner

கிளிநொச்சி, அக்கராயன்குளம்  பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு இருந்த சிலர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் காட்டை அழிப்பதற்குப் பயன்படுத்திய இயந்திரமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில்  அக்கராயன்குளம்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara