Jul 25, 2026 - 08:17 PM -
0
இன்று (25) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 39.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை வளிமண்டலவியல் மையத்திலேயே இன்றைய தினத்தின் மிக அதிக வெப்பநிலை இவ்வாறு பதிவாகியுள்ளது.
இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை பொலன்னறுவை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் பெறுமதி 38.6 டிகிரி செல்சியஸ் ஆகும்.
இவற்றைத் தவிர, 37 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவான ஏனைய 3 மாவட்டங்கள் பின்வருமாறு:
முல்லைத்தீவு: 37.5°C
மொணராகலை: 37.3°C
வவுனியா: 37.1°C
இன்று நண்பகல் வேளையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்தியத் தரவு சேகரிப்பு மையங்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை அளவுகள் செல்சியஸ் பாகைகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன.
