Jul 26, 2026 - 06:20 AM -
0
திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியின் அம்பாந்தோட்டை நகரில் நேற்று (25) பிற்பகல் 7:15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பலாந்தோட்டையிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அதற்கு எதிர் திசையில் ஹம்பாந்தோட்டையிலிருந்து தங்காலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் முதலில் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் அம்பலாந்தோட்டை வாதுருப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய இருவர் தங்காலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் மற்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
