Jul 26, 2026 - 10:59 AM -
0
கலவான, வெத்தாக்கல பகுதியில் உள்ள வெத்தாக்கல ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த கயான் சதருவன் எனும் 16 வயதுடைய பாடசாலை மாணவராவார்.
இவர் மற்றொரு நண்பருடன் சேர்ந்து வெத்தாக்கல ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, நீர்ரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கலவான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
