Jul 26, 2026 - 12:30 PM -
0
சிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது.
சிம்பாப்வே தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஆடியது இந்திய அணி. அந்த தொடர்களில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் அதிர்ச்சி அளித்தது.
அதனால் 2022 முதல் டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு சென்றது. தற்போது சிம்பாப்வே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்றதன் மூலம் மீண்டும் தரவரிசையில் முதல் இடத்தை கைப்பற்றியது இந்திய அணி.
