Jul 26, 2026 - 05:44 PM -
0
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 26 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்குதல் போட்டியில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த பதக்க வாய்ப்பொன்று இன்று (26) கைநழுவிப் போனது.
இதன்போது 60 கிலோகிராம் எடைப் பிரிவின் கீழ் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சுபுன் சோமதிலக, பதக்கமொன்றைப் பெறுவதற்காகக் கடுமையாக முயற்சி செய்தபோதிலும், அவரால் நான்காவது இடத்தையே பெற முடிந்தது.
சுபுன் சோமதிலக இந்தப் போட்டியில் தூக்கிய மொத்த எடை 244 கிலோகிராம்கள் ஆகும்.
இருப்பினும், அவரை விட 16 கிலோகிராம் அதிகமாக, அதாவது மொத்தம் 260 கிலோகிராம் எடையைத் தூக்கிள கென்ய வீரர், போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதேவேளை, புதிய போட்டி சாதனையையும் படைத்து மொத்தம் 273 கிலோகிராம் எடையைத் தூக்கிய மலேசிய வீரர் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டதுடன், 264 கிலோகிராம் எடையைத் தூக்கிய இந்திய வீரர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.
