Header Logo
Mogo Academy

செய்திகள்
சர்வதேச விருதை வென்ற இலங்கை கலைஞர்கள் நாட்டிற்கு

Jul 26, 2026 - 06:26 PM -

0

சர்வதேச விருதை வென்ற இலங்கை கலைஞர்கள் நாட்டிற்கு
Mobitel inner

மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில் விருதுகளை வென்ற சிரேஷ்ட நடிகர் மகேந்திர பெரேரா மற்றும் நடிகர் பிரியந்த சிறிகுமார ஆகியோர் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர். 

9 ஆவது கோல்டன் குளோப் விருது விழா - 2026 (9th Golden Globe Award - 2026) என நடைபெற்ற மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில், "ரிவர்ஸ்டன்" (Riverston) திரைப்படத்தின் நடிப்புக்காக மகேந்திர பெரேரா சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். 

அதே திரைப்படத்தின் நடிப்புக்காக பிரியந்த சிறிகுமார சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். 

இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 4.01 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான UL 315 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

இவர்களை வரவேற்பதற்காக "ரிவர்ஸ்டன்" திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிமந்தி போரகெ உள்ளிட்ட திரையுலகக் கலைஞர்கள் பலர் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். 

உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற திரைப்படப் படைப்புகள் மட்டுமே இந்த விருது விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara