Header Logo
Mogo Academy

செய்திகள்
நாட்டின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

Jul 26, 2026 - 09:57 PM -

0

நாட்டின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு
Mobitel inner

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. 

அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. 

தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் டெங்கு நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். 

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் உதவித் திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்தல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முன்னறிவிப்பு அடிப்படையிலான தடுப்பு உத்திகள் உள்ளிட்ட இலங்கையின் பரந்த டெங்கு ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது. 

இலங்கையிலுள்ள சமூகங்களுக்கு டெங்கு தொடர்ந்து ஒரு தீவிர சவாலாக இருந்து வருகிறது எனச் சுட்டிக்காட்டிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹோவெல், இந்தக் கூட்டாண்மையானது உடனடி நோயெதிர்ப்புத் திறன்களையும் நீண்டகால பொதுச் சுகாதாரத் திறன்களையும் வலுப்படுத்த உதவும் எனக் குறிப்பிட்டார்.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara