Jul 26, 2026 - 10:41 PM -
0
'தெரண சிக்னல்' கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ஜேர்மனியின் 'நோலிமிட் கைட்' (Nolimit Kite) குழுவின் இரு உறுப்பினர்கள் இன்று (26) நாட்டை வந்தடைந்தனர்.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுவதற்கு தற்போது அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள இந்தப் பட்டத் திருவிழாவின் ஊக்குவிப்பு நிகழ்வொன்றுக்காகவே இவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
6 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'தெரண சிக்னல்' கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவில் 30 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 80 பட்டக் கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெளிநாட்டுப் பட்டக் கலைஞர்களுக்கு மேலதிகமாக, இம்முறை பட்டத் திருவிழாவில் 1500 உள்நாட்டுப் போட்டியாளர்களுக்கும் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பட்டத் திருவிழாவிற்கான உள்நாட்டுப் போட்டியாளர்களின் பதிவு இம்மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதுடன், உள்நாட்டுப் போட்டிப் பிரிவிற்காகப் போட்டியாளர்கள் 8 பிரிவுகளின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும்.
பதிவு செய்வதற்கு, போட்டிப் பிரிவுக்குரிய ஆங்கில எழுத்து, பெயர், பிரதேசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு 0770 50 30 08 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் (WhatsApp) குறுஞ்செய்தியொன்றை அனுப்ப வேண்டும்.
உள்நாட்டுப் போட்டிப் பிரிவுகள்:
A - 15 வயதிற்குட்பட்ட பிரிவு
B - ஆக்கபூர்வமான பட்டம்
C - தெரண இலட்சினை பொறிக்கப்பட்ட ஆக்கபூர்வமான பட்டம்
D - சிக்னல் இலட்சினை பொறிக்கப்பட்ட ஆக்கபூர்வமான பட்டம்
E - மிகவும் வர்ணஜாலமான பட்டம்
F - விசித்திரமான அலங்காரங்கள் கொண்ட பட்டம்
G - கலையம்சம் பொருந்திய மயில் பட்டம்
I - சிக்னல் இரவுப் பட்டம்
