Header Logo
Mogo Academy

செய்திகள்
அரசியல் இலஞ்சம் வழங்கியதுமில்லை, வழங்கப் போவதுமில்லை!

Jul 27, 2026 - 02:04 PM -

0

அரசியல் இலஞ்சம் வழங்கியதுமில்லை, வழங்கப் போவதுமில்லை!
Mobitel inner

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் நேற்று (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

தேயிலை, இறப்பர், ஆபரணம் மற்றும் இரத்தினக்கற்கள் போன்ற நமது நாட்டின் வளங்களை மேம்படுத்த அரசாங்கத்திற்கு இயலாது போயுள்ளது. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை வென்றவர்கள், தற்போது பொய்களாலும் புரட்டுகளாலும் அதிகாரத்தைத் தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர். 

பாராளுமன்றத்தில் ஜே.வி.பியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய அவர்களுக்கு முதலமைச்சர் வேட்பாளரை பெற்றுத் தருவேன் என நான் வாக்களித்துள்ளதாக பிரஸ்தாபித்தார். உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அவர் நடந்து கொள்வதாலயே அந்த வேட்பாளர் பதவியை பெற்றுத் தருவேன் என கூறியுள்ளார். திசைகாட்டியின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு பின்னால் ஒழிந்து கொண்டே இவ்வாறு பொய்களை கூறி வருகிறார். 

இவை அனைத்தையும் செய்துகொண்டு நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு மரண அடி கொடுத்து, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. நீதிமன்றங்களின் அதிகாரத்தை அரசாங்கம் பலவந்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுகின்றது. இன்றும் கூட உயர்நீதிமன்றங்களில் வெற்றிடங்கள் காணப்பட்டாலும் அவற்றை நிரப்புவதற்கு இவர்கள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. 

ஐக்கிய மக்கள் சக்தி எந்நேரத்திலும் திசைகாட்டி கூறும் அரசியல் இலஞ்சங்களைக் கொடுத்ததில்லை. நாட்டு மக்களை பொய்களாலும் புரட்டுகளாலும் ஏமாற்றி நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்ல முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே நாட்டிற்கான கடமையை ஆற்றிவருகின்றது. 

கட்சியாக முதுகெலும்புடன் நின்று சுதந்திரமான, பக்கச்சார்பற்ற நீதிமன்றம் குறித்துப் பேசும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரமே காணப்படுகின்றது. ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களைப் போல நாம் கனம் நீதிபதிகளைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அழைத்து அழுத்தம் கொடுக்கவில்லை. 

இன்றும் கூட முதுகெலும்புடன் மக்களின் முன்னால் நிற்பதற்கும், நீதிமன்றத்திற்காகக் குரல் கொடுப்பதற்கும் ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara