Jul 27, 2026 - 06:17 PM -
0
தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடியாட்டம் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தீர்மானித்துள்ளார்.
இன்று (27) மாலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன உள்ளிட்ட தரப்பினரின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
நாளை (28) நடைபெறவுள்ள பெரஹராவின் பாதுகாப்புக்காகக் கூடுதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் பொலிஸாரையும் ஈடுபடுத்துவதற்கும் இக்கலந்துரையாடலில் மேலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
