Header Logo
Mogo Academy

நிகழ்வுகள்
நடைபவனி!

Jul 28, 2026 - 11:35 AM -

0

நடைபவனி!
Mobitel inner

அரசாங்கத்தின் 'கிளீன் சிறிலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் "தேசிய நேர்மை வாரம்" ஆரம்பத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தலைமையில் இன்று (28) விழிப்புணர்வு நடைபவனி நுவரெலியா பிரதான நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. 

ஊழலற்ற மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 

மேலும் தனிப்பட்ட இலாபங்களை விடப் பொது நலனுக்கு முன்னுரிமை அளித்து, சுய ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளுடன் சேவையாற்றும் அரச அதிகாரிகளை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். 

நுவரெலியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் தொடங்கிய விழிப்புணர்வு நடைபவனி நுவரெலியா பிரதான வழியாக பதுளை வீதியூடாக நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தை நோக்கிச் சென்றது. இப்பேரவையில் முப்படையினர் அடங்கறளாக சுமார் 500 அரச அதிகாரிகள் பங்கேற்றனர் தொடர்ந்து அங்கு ஒரு விழா நடைபெற்றது.

 

இதனை தொடர்ந்து, மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியிலும் குறித்த நடை பவனி இடம்பெற்றது. மன்னார் பிரதான பாதையூடாக மன்னார் பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது. 

அங்கிருந்து குறித்த நடை பவனி மன்னார் நகர பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. 

குறித்த நடை பவனியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பணியாளர்கள்,பிரதேச செயலக பணியாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார்,ராணுவம்,சுகாதார துறையினர், அரச தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பல நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த பேரணியில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.

--


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara