Header Logo
Mogo Academy

செய்திகள்
பேராதனை வைத்தியசாலை உணவு டெண்டரைப் பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது

Jul 28, 2026 - 12:06 PM -

0

பேராதனை வைத்தியசாலை உணவு டெண்டரைப் பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது
Mobitel inner

2,000,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வர்த்தகர் ஒருவரும் மற்றொரு நபரும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேராதனை போதனா வைத்தியசாலையின் 2027 ஆம் ஆண்டிற்கான சமையலறை உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான விலை மனுக் கோரல் அழைக்கப்பட்ட போது, முறைப்பாட்டாளரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம் எனக் கூறி, அந்த டெண்டரைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருவதாகக் கூறி சந்தேகநபர் இலஞ்சம் கோரியுள்ளார். 

இதன்போது, முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமாவின் பெயரில் விலைகோரல் சமர்ப்பிப்பதற்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காக முதற்கட்டமாக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகக் கோரப்பட்டுள்ளது. 

குறித்த தொகையானது 25 இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 20 இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. 

அந்த 20 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் கீழ், கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் மற்றொரு நபரும் நேற்று (27) கம்பளை தபால் அவலுவகத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara