Header Logo
Mogo Academy

வடக்கு
A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

Jul 28, 2026 - 03:45 PM -

0

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!
Mobitel inner

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது. 

குறித்த பாலமானது 40 மீற்றர் நீளமானது, திறந்து வைக்கப்பட்ட புளியம்பொக்கனை 06 வருடங்களின் பின்னர் மக்கள் பாவணைக்கு இன்று கையளிக்கப்பட்டது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியாளர்களினால் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த பாலம் ஆனது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையின் மூலம் 206 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாலத்தின் புணர அமைப்பு பணிகள் நிறைவடைந்தது. 

இன்று வீதிகள் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உத்தியோபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர் கிராம சேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர். 

குறித்த பாலத்தில் அபிவிருத்தி நடவடிக்கையின் போது பல்வேறு இன்னல்களும் இரண்டு உயிர்கள் பறி கொடுத்ததுடன் பலர் வீதி விபத்துகளையும் சந்தித்து வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த காலத்தில் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

--


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara