Header Logo
Mogo Academy

செய்திகள்
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Jul 28, 2026 - 08:29 PM -

0

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Mobitel inner

களனிவெளி வீதியில் ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும், நாவல - நாரஹேன்பிட்டி ரயில் கடவையை மூடுவது குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள நாவல - நாரஹேன்பிட்டி வீதி ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி, எதிர்வரும் 01 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வரை களனிவெளி பாதையில் கொழும்பு கோட்டைக்கும் நுகேகொடை ரயில் நிலையத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது.

 

மேலும், அன்றைய தினம் பிற்பகலிலும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் களனிவெளி பாதையில் ரயில் இயங்கும் நேரங்கள் குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara