Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
ரூபா 9,000 கோடி வசூலித்த “மைக்கேல்”!

Jul 29, 2026 - 11:58 AM

ரூபா 9,000 கோடி வசூலித்த “மைக்கேல்”!
Mobitel Inner 1278

‘மைக்கேல்’ திரைப்படம் மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஜியோ ஹோட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. 

பாப் இசை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் திகதி பிறந்த பிறந்த இவர், சிறுவயதிலேயே இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். தனது பாடல்கள் மூலம் அமெரிக்காவில் நிலவிய நிறவெறி, பொலிஸாரின் வன்முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல சமூக விழிப்புணர்வு கருத்துகளையும் மைக்கேல் ஜாக்சன் ஏற்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன், 13 கிராமி விருதுகளையும், பல்வேறு அமெரிக்க இசை விருதுகளையும் வென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். 

‘மைக்கேல்’ படத்தை ஆண்டோயின் புகுவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார். ‘கிளாடியேட்டர்’ புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார். 

லயன்ஸ்கேட் ஸ்டுடியோ, யுனிவர்சல் பிக்சர்ஸ் மற்றும் கினோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர். 

இப்படத்தில் நியா லாங், ஜூலியானோ வால்டி, கெய்லின் டூரல் ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி வெளியானது. 

‘மைக்கேல்’ படம் உலகளவில் 9,000 கோடி ரூபாவுக்கும் (1 பில்லியன் டொலர்) மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ (977 மில்லியன் டொலர்) படம் முதல் இடத்தில் இருந்தது. அதை தற்போது மைக்கேல் தாண்டியுள்ளது. 

இந்நிலையில், ‘மைக்கேல்’ திரைப்படம் மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஜியோ ஹோட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

Mobitel 1278