Header Logo
Mogo Academy

இந்தியா
மாணவர்களுக்கு சத்துணவுடன் சிக்கன் பிரியாணி!

Jul 29, 2026 - 12:12 PM -

0

மாணவர்களுக்கு சத்துணவுடன் சிக்கன் பிரியாணி!
Mobitel inner

முதலமைச்சருடன் கலந்து பேசி அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறலாம் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். 

அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்தினார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்தனர். 

அப்போது சில சங்கங்கள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் வாரத்திற்கு ஒருமுறையாவது சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

சத்துணவில் சிக்கன் பிரியாணி வழங்குவதற்கான கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் முதலமைச்சருடன் கலந்து பேசி அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறலாம் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். 

இது தவிர பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல் ஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி மதிப்பெண்களை குறைத்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத் திருத்தம் மற்றும் பழைய ஊதிய முறையை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். 

சங்கங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை மனுக்களை பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் மயமாக்கப்படும். கோரிக்கைகள் வகைப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். 

உடற்கல்வி, ஓவியம் கணினி அறிவியல் மற்றும் தையல் உள்ளிட்ட பாடங்களில் மொத்தம் 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும் என்று சங்கத் தலைவர் செந்தில் குமார் வலியுறுத்தினார்.


MOST READ

காணொளி
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

Mobitel Upahara