Header Logo
Mogo Academy

செய்திகள்
கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது

Jul 29, 2026 - 12:35 PM -

0

 கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது
Mobitel inner

மன்னார், சவுத்பார் கடற்கரை மற்றும் தரைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியினூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மற்றும் எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி தரை வழியினூடாக கொண்டு செல்லப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள், 03 டிங்கி படகுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட 'இலங்கை கடற்படை கப்பல் கஜபா' நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மூன்று டிங்கி படகுகளும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

இதன்படி, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேகநபர்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதுடன், கைதானவர்கள் 24 முதல் 46 வயதிற்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

Mobitel Upahara