Header Logo
Mogo Academy

இந்தியா
மெட்ரோ ரயிலில் பயணித்த முதலமைச்சர் விஜய்!

Jul 29, 2026 - 03:38 PM -

0

மெட்ரோ ரயிலில் பயணித்த முதலமைச்சர் விஜய்!
Mobitel inner

சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட வழித்தடமான போரூர் - பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார். 

முதலமைச்சர் விஜய் சென்னை மாநகரில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று (29) மாலை 4 மணி அளவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளார். 

இதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் புறப்பட்டு அண்ணாசாலை வந்த முதலமைச்சர் விஜய் ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையம் சென்று மெட்ரோவில் பயணம் செய்தார். நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணம் செய்யும் அவர் அங்கு இறங்கி மெட்ரோ ரயில் தலைமையகம் மற்றும் கட்டுப்பாடு மையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார். 

அதன்பிறகு அங்கிருந்து காரில் ஏறி கிண்டி கத்திப்பாரா செல்கிறார். அங்கு பூந்தமல்லி ரோட்டில் நடைபெறும் மெட்ரோ கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். 

பின்னர் அங்கிருந்து காரில் போரூர் செல்கிறார். சென்னை மெட்ரோ ரெயிலின் 2 ஆம் கட்ட வழித்தடமான போரூர் - பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஆளில்லா ரயிலில் போரூர் வரை பயணிக்கிறார். போரூரில் இறங்கி கார் மூலம் வீட்டுக்கு திரும்புகிறார். 

முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


MOST READ

காணொளி
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

Mobitel Upahara