Header Logo
Mogo Academy

செய்திகள்
அரசாங்கத்திற்கு சஜித் விடுத்த அறிவறுத்தல்

Jul 29, 2026 - 04:05 PM -

0

அரசாங்கத்திற்கு சஜித் விடுத்த அறிவறுத்தல்
Mobitel inner

அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதிக்கு ஆணை கிடைத்ததே தவிர, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

எமது நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழிக்கும், ஜனநாயகத்தை நாசம் செய்யும் நீதிமன்றம் என்ற தூணை அழிப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயற்படுவது வெட்கக்கேடான செயலாகும். 

சட்டம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் மீதே ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுகின்றன. 

அவ்வாறே இவற்றின் அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளும் அமைந்து காணப்படுகின்றன. 

இது தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது நீதி அமைச்சருக்கோ சரியான புரிதல் இல்லையெனில், மொன்டெஸ்கிவின் நூலைப் படித்துப் பார்க்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

நிறைவேற்று அதிகாரம் கனம் நீதிமன்றத்தில் தலையிடுவதன் மூலம் ஜனநாயகம் அழிக்கப்படும் அதேவேளை, கனம் நீதிமன்றத்தின் சுதந்திரம், மக்கள் மத்தியில் கனம் நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மை மற்றும் கனம் நீதிபதிகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

உலகின் பல நாடுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் அதிகார பீடங்கள் நீதிமன்றத்திலும் சட்டத்துறையிலும் தலையிட முயன்றுள்ளன. 

அண்மையில் இந்தியாவில் நடந்த சம்பவங்களை மறந்துவிட வேண்டாம் எனத் தற்போதைய அரசாங்கத்திற்கு ஞாபகமூட்டிக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

Mobitel Upahara