Header Logo
Mogo Academy

செய்திகள்
கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

Jul 29, 2026 - 05:34 PM -

0

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்
Mobitel inner

முதலீட்டாளர்களுடனான தொடர்பை வலுப்படுத்துவதிலும் கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் இலங்கை மிகப்பெரிய அளவிலான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். 

'ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ்' (S&P) நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு முக்கியமாக இருக்கும் மாற்றீடு மற்றும் பரிவர்த்தனை தரப்படுத்தலில் இலங்கை 'CCC+' இல் இருந்து 2026 ஆம் ஆண்டில் 'B-'க்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையின் கடன் தரவரிசை மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து 'ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ்' (S&P) நிறுவனத்தால் 2026 ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட புதிய தரவரிசையின்படி, இலங்கையின் கடன் தரவரிசையை முந்தைய மட்டத்திலேயே ஸ்திரமாகப் பேண அரசாங்கத்தால் முடிந்துள்ளது. 

டித்வா புயல் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், பொருளாதாரப் பாதையை மாற்றாமல் முன்னோக்கிச் சென்றமையாலேயே இந்த ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்தது என்பதைப் பிரத்யேகமாகக் குறிப்பிட வேண்டும். 

அதேபோல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு முக்கியமாக இருக்கும் மாற்றீடு மற்றும் பரிவர்த்தனை (Transfer and Convertibility - T&C) தரவரிசை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 

ஒரு முதலீட்டாளர் தான் ஈட்டும் இலாபத்தை மீண்டும் தனது நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான வசதி மற்றும் அவர்கள் பெற்ற கடன்களையும் வட்டியையும் செலுத்துவதற்காக உள்ளூர் நாணயத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றிக்கொள்வதற்கான திறன் ஆகியவை இதன் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன. 

2022 ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தான 'CCC' மட்டத்தில் இருந்த இந்தத் தரவரிசை, 2025 இல் 'CCC+' ஆகவும், 2026 ஆம் ஆண்டாகும்போது 'B-' (B minus) ஆகவும் முன்னேற்றமடைந்துள்ளது. 

குறிப்பாகப் பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாகவே இந்நிலை உருவாகியது என்று கூற வேண்டும். 

தற்போது ஸ்திரமற்ற நிலையிலிருந்து வெளிவந்து, குறிப்பாக வெளிநாட்டு நாணய திரவத்தன்மை மற்றும் கையிருப்பை கட்டியெழுப்புதல் ஆகிய காரணிகள் இதற்கு உதவியுள்ளன. 

அதனால் இந்த 'B-' நிலைப்பாடு சிறப்பாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். 

இந்த வெளிநாட்டு நாணயக் கையிருப்பு, இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தியோ அல்லது பொருளாதாரத்தைச் சுருக்கியோ கட்டியெழுப்பப்படவில்லை. 

அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் இயல்பாக நடைபெற அனுமதித்து, மத்திய வங்கியின் மூலோபாயத் தலையீட்டின் மூலம் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணி கையிருப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய புரிதல், அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச நிறுவனங்களே இதனைத் தெரிவித்துள்ளனவே தவிர சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் கூறுவது அல்ல. 

எனவே இது பிரத்யேகமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கை காட்டிய கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் கடன்கொடுத்தோருடனான தொடர்பு காரணமாகவே சர்வதேச நிதி நிறுவனத்தால் இந்த 'B -' நிலை வழங்கப்பட்டுள்ளது. 

கடந்தகால அனுபவங்களின்படி நமது நாட்டின் கடன் வெளிப்படைத்தன்மை எவ்வாறு இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. 

சில தணிக்கை அறிக்கைகளில் கூட பெறப்பட்ட கடன் எங்கு பதிவாகியுள்ளது என்றே தெரியாத நிலை காணப்பட்டது. கடன் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை உடைந்துவிடும். 

ஆனால் 2025ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, முதலீட்டாளர்களுடனான தொடர்பை வலுப்படுத்துவதிலும் கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் இலங்கை மிகப்பெரிய அளவிலான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. 

அதன்படி, வழங்கப்பட்ட மொத்த 50 புள்ளிகளில் 43.67 புள்ளிகளைப் பெற நம்மால் முடிந்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 6.3 புள்ளிகள் வளர்ச்சியாகும். 2025 இல் 37.33 புள்ளிகளே இருந்தது. எனவே, 2026 ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட நாடுகளுக்கு மத்தியில் நாம் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளோம். 

இதன்படி, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதில் இலங்கை 4வது இடத்தைப் பிடித்திருப்பது, மாற்றீடு மற்றும் பரிவர்த்தனை தரவரிசையில் 'B -' நிலைக்கு உயருவதற்கு உதவியுள்ளது என நாங்கள் கருதுகிறோம். 

வழங்கப்பட்ட மொத்த 50 புள்ளிகளில் 43.67 புள்ளிகளைப் பெற நம்மால் முடிந்துள்ளது. 

இது 2025 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 6.3 புள்ளிகள் வளர்ச்சியாகும். 

2025 இல் 37.33 புள்ளிகளே இருந்தது. எனவே, 2026 ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட நாடுகளுக்கு மத்தியில் நாம் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளோம். 

இதன்படி, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதில் இலங்கை 4வது இடத்தைப் பிடித்திருப்பது, மாற்றீடு மற்றும் பரிவர்த்தனை தரவரிசையில் 'B-' நிலைக்கு உயருவதற்கு உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

Mobitel Upahara