Header Logo
Mogo Academy

சினிமா
சியான் 63 இன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

Jul 29, 2026 - 07:16 PM -

0

சியான் 63 இன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
Mobitel inner

சியான் விக்ரம் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் இருமுகன். இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு சியான் 63 எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ளது. 2 ஆம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக படக்குழு முழு வீச்சில் தயாராகி வருகிறது. 

இப்படத்தில் விக்ரமுடன் ரியா ஷிபு, ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், ஷாமி திலகன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

உளவுத்துறை அதிகாரிகளான விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை கொல்வதற்காக பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். லவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மாறுவேடத்தில் அங்கு சென்று குண்டு வைத்து அவனைக் கொல்கின்றனர். 

இதன்பின்னர் காதலர்களாக இருந்த விக்ரமும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடிந்த பின் மலைப்பகுதியில் இருவரும் நின்று கொண்டிருக்கும்போது, யாரே ஒருவர் நயன்தாராவை சுட்டு வீழ்த்துகிறார். குண்டடிபட்ட நயன்தாரா மலையில் இருந்து கீழே விழுகிறார். 

அதன்பின் விக்ரம் உளவுத்துறையில் இருந்து ஓய்வு பெற்று 4 வருடங்கள் கழிந்த நிலையில், மலேசியாவில் இந்திய தூதரகம் மர்ம நபர்களால் தாக்கப்படுகிறது. அந்த தாக்குலை நடத்தியது லவ் என்பது இந்திய உளவு அமைப்புக்கு தெரிய வருகிறது. லவ்வை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது. 

நயன்தாராவும், விக்ரமும் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். எனவே, லவ்வை பிடிக்க மறுபடியும் உளவுத்துறைக்கு அழைக்கப்படுகிறார் விக்ரம். முதலில் இதற்கு மறுக்கும் விக்ரம் பிறகு சில நிபந்தனைகளுடன் அந்த பொறுப்பை ஏற்கிறார். 

உளவுத்துறை அதிகாரியான நித்யாமேனனுக்கு உதவியாளராக செல்லும் விக்ரம் லவ்வை கண்டுபிடித்து எப்படி வீழ்த்தினார்? விக்ரமின் முதல் தாக்குதலில் லவ் உயிர்தப்பியது எப்படி? அவன் எதற்காக இந்திய தூதரகத்தை தாக்கினான்? என்பதே மீதிக்கதை.


MOST READ

காணொளி
நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

Mobitel Upahara