Jul 29, 2026 - 09:21 PM -
0
பெந்தோட்ட கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற பெராமோட்டார் விபத்தில் வௌிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய பாலஸ்தீன பெண் ஆவார்.
பெராமோட்டார் இயந்திரம் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் ஓட்டுநராகச் செயற்பட்ட கொலம்பிய நாட்டவர் உயிர்தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெந்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
