Header Logo
Mogo Academy

சினிமா
பிரம்ம முகூர்த்தத்தில் வௌியானது ராமாயணா ட்ரெய்லர்

Jul 30, 2026 - 08:58 AM -

0

பிரம்ம முகூர்த்தத்தில் வௌியானது ராமாயணா ட்ரெய்லர்
Mobitel inner

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் இன்று (30) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. 

முன்னதாக இந்த ட்ரெய்லர் ஜூலை 24 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்பொழுது வெளியாகி உள்ளது. 

ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யாஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. 

அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். 

ஒஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

4.09 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக உள்ளது. 

மூன்று உலகங்களுக்கும் தானே அரசன் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் ராவணனின் (யாஷ்) உரையாடலுடன் டிரெய்லர் தொடங்குகிறது. 

ராமரின் (ரன்பீர்) குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள் மற்றும் சீதையுடனான திருமணம் போன்ற காட்சிகள் இதில் காட்டப்பட்டுள்ளன. 

அதன்பிறகு, 14 வருட வனவாசம், சீதாராமன் லட்சுமணனுடன் வனத்திற்குச் செல்வது, மற்றும் ராவணன் சீதையைக் கடத்துவது போன்ற முக்கியக் காட்சிகளுடன் இந்த ட்ரெய்லர் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. 

குறிப்பாக, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

 


MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara