Jul 30, 2026 - 10:32 AM -
0
East Zone அணிக்கு இஷான் கிஷன் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி துணை அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார்.
அபிமன்யு ஈஸ்வரன், முகேஷ் குமார், ஷபாஸ் அகமது, குமார் குஷாக்ரா உள்ளிட்ட பலரும் இடம்பிடித்துள்ளனர்.
East Zone அணியின் விவரம் வருமாறு,
அபிமன்யு ஈஸ்வரன், சுதிப் குமார் கராமி, ஷபாஸ் அகமது, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகமது ஷமி, முகேஷ் குமார், இஷான் கிஷன் (அணி தலைவர்), குமார் குஷாக்ரா, ஷிகர் மோகன், அனுகுல் ராய், விராட் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, வைபவ் சூர்யவன்ஷி (துணை அணி தலைவர்), டெனிஷ் தாஸ், அபிஜித் சர்க்கார்.
East Zone அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி North East Zone மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.
