Jul 30, 2026 - 11:43 AM -
0
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ். துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விக்கெட் கீப்பர் பணியை பெரும்பாலும் மேற்கொள்வதில்லை. பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரராகவும், சீனியர் வீரராகவும் உருவெடுத்துள்ளார். இதனால் டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பங்களாதேஷ் அணியின் ஒயிட் பால் கிரிக்கெட் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியின் தலைவராக மெஹிதி ஹசன் இருந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு தற்போது லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2027 ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வரை அணி தலைவராக இருப்பார் என பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
2027 உலக கிண்ணம் அடுத்த வருடம் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடக்கிறது. அக்டோபர் 4 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 21 ஆம் திகதி வரை நடக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன.
31 வயதாகும் லிட்டன் தாஸ் 2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். பங்களாதேஷ் அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 20 அரைசதங்களுடன் 3,356 ஓட்டங்களை அடித்துள்ளார். சராசரி 36.47 ஆகும்.
104 ஒருநாள் போட்டிகளில் 5 சதம், 14 அரைசதங்களுடன் 2,869 ஓட்டங்களை அடித்துள்ளார். சராசரி 30.84 ஆகும். 122 டி20 போட்டிகளில் விளையாடி 16 அரைசதங்களுடன் 2,702 ஓட்டங்களை அடித்துள்ளார்.
