Jul 30, 2026 - 04:27 PM -
0
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் அணி தலைவராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலும், உலகின் பல்வேறு டி20 லீக் போட்டிகளிலும் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்ட அனுபவம் கொண்ட பிளெமிங், நியூசிலாந்து அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட அவர், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்த உள்ளார்.
மேலும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய அணி தலைவராக ஜோ ரூட் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய அணி தலைவராக ஜோ ரூட் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
