Header Logo
SLIC
Rhythams of Lanka
உலகம்
தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து!

Jul 31, 2026 - 04:10 PM

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து!
Mobitel inner

தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில் நேற்று (30) பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்காவின் ட்ராம்ப்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 24 கி.மீ தொலைவில், ஈடன்பர்க் செல்லும் வழியில் நேற்று இரவு 9.30 மணியளவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. 

இதில், பேருந்திற்கு வெளியே 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டுளதாக துறை செய்தித் தொடர்பாளர் மோண்ட்லி மவாம்பி கூறினார். 

மேலும், வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara