Header Logo
SLIC
Rhythams of Lanka
உலகம்
உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய திறந்த மூல AI மாதிரி சீனாவிலிருந்து இலவசம்

Aug 1, 2026 - 08:04 AM

உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய திறந்த மூல AI மாதிரி சீனாவிலிருந்து இலவசம்
Mobitel inner

சீனாவில் தயாரிக்கப்பட்ட Kimi K3 எனும் திறந்த மூலப் பெரு மொழி மாதிரியை (Open-source large model) கடந்த 27 ஆம் திகதி முதல் உலகளாவிய ரீதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முழுமையாகத் திறந்துவிட சீனாவின் Moonshot AI நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுவரை உலகில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய திறந்த மூல AI மாதிரியான இதன் மொத்த அளவுருக்களின் (parameters) எண்ணிக்கை 2.8 டிரில்லியன் ஆகும். 

இந்த Kimi K3 மாதிரியானது, சீன Moonshot AI நிறுவனத்தின் முன்னணித் தயாரிப்பாகும். 

மேலும், இந்த மாதிரியில் முழுமையான மாதிரி எடைகள் (model weights), தொழில்நுட்ப அறிக்கைகள் மற்றும் மாதிரிப் பயிற்சிக்குத் துணைபுரியும் மூன்று அடிப்படைத் தொழில்நுட்ப வசதிகள் உள்ளடங்கியிருப்பது இதன் சிறப்பு அம்சமாகும். 

உலகெங்கிலும் உள்ள செயற்கை நுண்ணறிவு உருவாக்குநர்கள் (AI developers) இதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து உள்ளூர் ரீதியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

சீனப் மிகப்பெரிய AI மாதிரி ஒன்று உலகிற்குத் திறந்துவிடப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என்றபோதிலும், 2.8 டிரில்லியன் அளவுருக்களைக் கொண்ட மிகப்பெரிய மாதிரி ஒன்று உலகளாவிய ரீதியில் முழுமையாகத் திறந்துவிடப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும். 

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சீனாவில் செயற்கை நுண்ணறிவுப் மிகப்பெரிய மொழி மாதிரிகளைத் திறந்த மூலமாக வெளியிடுவது துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது இத்துறையின் முன்னணி நிறுவனங்கள் பலவும் தமது மாதிரிகளின் மூலக் குறியீடுகளைத் திறந்துவிட நடவடிக்கை எடுத்துள்ளன.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara