Header Logo
SLIC
Rhythams of Lanka
உலகம்
இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ: 5 பேர் பலி, 41 பேர் மாயம்!

Aug 2, 2026 - 06:57 PM

இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ: 5 பேர் பலி, 41 பேர் மாயம்!
Mobitel inner

சுமார் 250 பயணிகளுடன் பயணித்த இந்தோனேசிய பயணிகள் கப்பலொன்று அந்நாட்டு கடற்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இவ்விபத்தில் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 41 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிழக்கு ஜாவாவின் சுராபாயாவில் இருந்து தெற்கு சுலவேசியின் மகசார் நோக்கிப் பயணித்த இக்கப்பல், மதுரா தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. 

கப்பலில் திடீரென தீ பரவியதையடுத்து உடனடியாகச் செயற்பட்ட அதன் மாலுமி, இது குறித்து அந்நாட்டு தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகத்திற்கு உடனடியாக அறிவித்து உதவியைக் கோரியுள்ளார். 

மாயமானவர்களைக் கண்டறிவதற்கும், விபத்துக்குள்ளான ஏனைய பயணிகளை மீட்பதற்கும் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரும் நிவாரணக் குழுவினரும் இணைந்து தற்போது விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara