Aug 2, 2026 - 09:15 PM
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'செண்டோ' என்ற குற்றவாளியின் தந்தையை 'நிசல செவன' மயானத்தில் வைத்து சுட்டுக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவினரால் மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்தபோதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'கொஸ்மல்லி' என்ற குற்றவாளியினால் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சந்தேகநபருக்கு இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி பிணையில் வந்தநிலையிலேயே, கடந்த 19 ஆம் திகதி இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டு இராணுவ விசேட படையணியில் இருந்து விலகிய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

