Header Logo
SLIC
Rhythams of Lanka
உலகம்
அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்

Aug 3, 2026 - 05:32 AM

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்
Mobitel inner

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

​ எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை. 

​ ஹோர்முஸ் நீரிணையை விரைவாக மீண்டும் திறப்பது மற்றும் தெஹ்ரானின் அணுசக்தித் திறன் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான உடன்பாட்டை எட்டும் நோக்கில், உடனடியாக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலைத் தாம் கைவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். 

​ ஈரானும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் நீரிணையை "உடனடியாக, முழுமையாகவும் முற்றாகவும் மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவதற்கும் வழிவகுக்கும் உடன்பாட்டை நிறைவு செய்ய அவகாசம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். 

​ தெஹ்ரான் விரைவாக ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். 

​ இந்நிலையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறுகையில், திங்கட்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிவித்தார். 

​ எனினும், அது எங்கு நடைபெறும் அல்லது யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை. 

​ ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா என வினவப்பட்டபோது, அதற்குப் பதிலளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார். 

​ அதற்குப் பதிலாக, நான் ஓர் உடன்பாட்டை எட்டவே விரும்புகின்றேன். நான் மனிதர்களைக் கொல்ல விரும்பவில்லை, ஏனெனில் ஏராளமானோர் இறக்கிறார்கள், அதை நாங்கள் விரும்பவில்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara