Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
கண்டி சிக்னேச்சர் விற்பனை நிலையத்தின் மூலம் சில்லறை விற்பனையில் தனது நிலைபேறு முயற்சிகளை ஹட்ச் மேலும் விரிவுபடுத்துகிறது

Aug 3, 2026 - 02:12 PM

கண்டி சிக்னேச்சர் விற்பனை நிலையத்தின் மூலம் சில்லறை விற்பனையில் தனது நிலைபேறு முயற்சிகளை ஹட்ச் மேலும் விரிவுபடுத்துகிறது
Mobitel Inner 1278

ஹட்ச் [HUTCH] நிறுவனமானது அண்மையில் கண்டியில் கண்டி சிக்னேச்சர் [Kandy Signature] விற்பனை நிலையத்தைத் திறந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ளவிற்பனை நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கொழும்பு கோட்டை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் ஏற்கனவே திறக்கப்பட்ட கிளைகளைத் தொடர்ந்து, சுற்றுப்புறப் சூழலைப் பாதுகாக்கும் நிலைபேறான முறையில் முறையில் உருவாக்கப்பட்ட மூன்றாவது விற்பனை நிலையம் இதுவாகும். 

இந்த விற்பனை நிலையமானது பாரம்பரியமான சில்லறை விற்பனை வடிவமைப்பு முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதன் உட்புறத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிலைபேறுடன் கூடிய மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் இயற்கைச் பொருட்கள் கொண்டு அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. மீளப் பயன்படுத்தப்பட்ட மரப் பலகைகள், பாக்கு இலைகள், வாழைப்பட்டை மற்றும் கும்புறு விதைகள் உள்ளிட்ட பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு கூறும் உள்ளூர் கைவினைஞர்களால் கைவினையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விற்பனை நிலையத்தின் வடிவமைப்பிலேயே சுழற்சி பொருளாதாரக் கொள்கை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் உள்ள சமூகங்களுக்கு நேரடி பலனை வழங்குகிறது. 

அதன் வடிவமைப்பைத் தாண்டி, சிக்னேச்சர் விற்பனை நிலையம் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வசதியானதும் இயற்கையால் ஈர்க்கப்பட்டதுமான சூழலில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையம், ஹட்ச் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆராயவும், ஆதரவு சேவைகளைப் பெறவும், வெறும் பரிவர்த்தனை நிலையமாக மட்டும் அல்லாமல், கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சூழலில் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. மேலும், இந்த விற்பனை நிலையம் தனது செயற்பாடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்துவதுடன், மின்னணுக் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான வசதியையும் கொண்டுள்ளது. இதன் மூலம், பயன்பாட்டு காலம் முடிவடைந்த மொபைல் சாதனங்களை பொறுப்புடன் அகற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது, ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் ஹட்ச் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. 

“நிலையான வளர்ச்சி என்பது எங்களின் ஒரு கொள்கை மட்டுமல்ல; அது எங்கள் செயல்பாடுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப்பிணைந்துள்ளது”, என ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா தெரிவித்தார். “கண்டி சிக்னேச்சர் விற்பனை நிலையம் இதற்கான ஒரு பிரதிபலிப்பாகும். எரிசக்தி சேமிப்பு, பொருட்கள், கைவினை மற்றும் நாம் இணைந்து செயல்படும் சமூகங்கள் குறித்து திட்டமிட்ட முடிவுகளை மேற்கொள்ளும்போது, சில்லறை விற்பனை எவ்வாறு அமைய முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரத்திற்கு இதனை கொண்டு வருவதில் நாம் பெருமையடைகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார். 

இலங்கையில் சில்லறை விற்பனை மற்றும் வர்த்தகச் சேவைகளில் புதிய சகாப்தத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, தனது சிக்னேச்சர் கிளைகளின் வலையமைப்பினை நாடு முழுவதும் மேலும் விரிவுபடுத்த ஹட்ச் திட்டமிட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

Mobitel 1278