Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
MasterChef Sri Lanka கட்டம் 2 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ கோழி இறைச்சி விநியோகஸ்தராக New Anthoney’s Group மீண்டும் இணைகிறது

Aug 3, 2026 - 02:39 PM

MasterChef Sri Lanka கட்டம் 2 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ கோழி இறைச்சி விநியோகஸ்தராக New Anthoney’s Group மீண்டும் இணைகிறது
Mobitel Inner 1278

நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரங்க குருகுலாராச்சி (வலப்புறம்), Realty TV Productions நிறுவனத்தின் தலைவராகிய அஜித் கம்லத் ஆகியோருடன் காணப்படுகிறார். 

நியூ அன்டனிஸ் குழுமமானது[New Anthoney’s Group] இலங்கை சிறந்த சமையற்கலைஞர் கட்டம் 2 [MasterChef Sri Lanka Season 2] நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ கோழி இறைச்சி விநியோகஸ்தராக மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது கட்டத்தில் தொடங்கிய பங்குடைமையனது மேலும் தொடர்கிறது. 

நாட்டின் சிறந்த வீட்டுச் சமையற்கலைஞர்களை தேடும் போட்டி மீண்டும் தொடங்கும் நிலையில், MasterChef சமையலறையில் பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி எப்போதும் வழங்கி வந்த அதே உத்தரவாதத்தைக் கொண்டிருக்கும்:நியூ அன்டனிஸ் குழுமத்தின் கோழிகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் இன்றி வளர்க்கப்பட்டதுடன் அறிவியல் ரீதியாகச் சரிபார்க்கப்பட்டதாகும். மேலும் இது நான்கு தசாப்தங்களாக இலங்கையின் மிகக் கடுமையான கோழி வளர்ப்புத் தரநிலையை உருவாக்கி வந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டது. 

“இலங்கை ஒரு தட்டில்” என்ற கருப்பொருளின் கீழ், இலங்கையின் சிறந்த சமையற்கலைஞர்கள் கட்டம் 1 [MasterChef Sri Lanka -,Season 1] 2026 பெப்ரவரி 14 அன்று ITN தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதல் கட்டமானது 25 பாகங்களாக நடைபெற்றதுடன், நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் போட்டியாளர்களை ஈர்த்தது. ஹசலகாவைச் சேர்ந்த சஞ்சுல மனோஜ், 2026 மே 9 அன்று MasterChef Sri Lanka நிகழ்ச்சியின் முதல் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். படைப்பாற்றல், மற்றும் இலங்கையின் சமையல் பாரம்பரியத்தை உண்மையான நுட்பமும் மேம்பாடும் கொண்ட உணவுகளாக மாற்றும் திறன் ஆகியவற்றைச் சோதித்த போட்டியில் வெற்றி பெற்று அவர் இந்த விருதை வென்றார். 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் கலைஞர் பீட்டர் குருவிட்ட தலைமையில், சவிந்த்ரி பெரேரா, ரோஹன் பெர்னாண்டோபுள்ளே மற்றும் கபில ஜயசிங்க ஆகியோர் இணைந்து நடுவர்களாக செயல்பட்டனர். நிகழ்ச்சியின் உயர்ந்த நோக்கத்துக்கு இணையான விமர்சனத் தரநிலையை அவர்கள் உருவாக்கினர். 72 நாடுகளில் ஒளிபரப்பாகும் ஒரு சர்வதேச நிகழ்ச்சி வடிவத்தின் 71வது சர்வதேச பதிப்பாக, MasterChef Sri Lanka தனது முதலாவது கட்டத்திலேயே இலங்கையின் உணவுக் கலாசாரம் உலக அரங்கில் பேசுவதற்கு போதுமான வலிமையைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்தது. 

கட்டம் 2 இனை தொடரும் முடிவு வெறும் சம்பிரதாயமான ஒன்று அல்ல. கட்டம் 1ற்காக நியூ அன்டனிஸ் குழுமமானது இயல்பான தெரிவாக இருந்ததற்குக் காரணம், இலங்கையில் வேறு எந்த உற்பத்தியாளரும் பின்வரும் கூற்றை முன்வைக்க முடியாததேயாகும் : அதாவது உற்பத்தியின் எந்த நிலையிலும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படாமல் ஒவ்வொரு கோழியும் வளர்க்கப்படுகிறது. இந்த நடைமுறை, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ISO/IEC 17025 அங்கீகாரம் பெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாத ஆய்வு நிலையத்துடன் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்தாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சுயாதீனமாகச் சரிபார்க்கப்படுகிறது. கட்டங்கள் மாறினாலும், இந்த அர்ப்பணிப்பு மாறுவதில்லை. மாறாக, கட்டம் 2 தொடங்கும் நேரத்தில், இந்தத் தரநிலை மேலும் உறுதியாக நிலைபெற்றுள்ளதுடன்,தமது தட்டில் இறுதியாக இடம்பெறும் உணவுப் பொருட்களுக்கு இதன் அர்த்தம் என்ன என்பதையும் பார்வையாளர்கள் மேலும் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர். 

“கட்டம் 1 தொடங்கிய முதல்நாளிலிருந்தே அதன் ஒரு பகுதியாக செயற்பட்டதில் நாம் பெருமை கொண்டோம் ; கட்டம் 2-ற்காக மீண்டும் இணைவதிலும் அதே அளவு பெருமை கொள்கிறோம். MasterChef Sri Lanka ஒரு முக்கியமான செயலைச் செய்துள்ளது: இந்த நாட்டின் உணவு கலாசாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய அளவுக்கு மதிப்புமிக்கது என்பதையும், உணவின் பின்னணியில் உள்ள மூலப்பொருட்கள் சமையற்கலைஞரின் திறமைக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை என்பதையும் இது இலங்கைக்கு எடுத்துக்காட்டியுள்ளது. நியூ அன்டனிஸ் எப்போதும் இதையே நம்பி வந்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு உரிய தளம் இதுவே,” என நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளருமான எரங்க குருகுலாராச்சி தெரிவித்தார். 

இந்த பங்குடைமையானது,குழுமத்தின் வளர்ச்சி வேகம் கணிசமாக அதிகரித்து வரும் ஒரு முக்கியமான தருணத்தில் உருவாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், உலக வங்கி குழுமத்தின் தனியார் துறைப் பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், நியூ அன்டனிஸ் ஃபார்ம்ஸ் குழும நிறுவனத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான முதலீட்டை அறிவித்தது. இந்த முதலீடானது உற்பத்தித் திறனை விரிவுபடுத்துதல், சிறு விவசாயிகளின் வலையமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் ஆகிய நிறுவனத்தின் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது. கட்டம் 2 போட்டியாளர்களுக்காக, சமையலறை ஒரு முக்கியமான முன்னிலையுடன் தொடங்குகிறது: FSSC 22000, ISO 22000, HACCP மற்றும் GMP தரநிலைகளுக்கு ஏற்ப சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள்; சர்வதேச ஹலால் சான்றிதழுடன், ISO 14064-1:2018 தரநிலையின் கீழ் GHG Verification Statement-ஐயும் கொண்டவை. இந்தச் சான்றிதழை Control Union Netherlands வழங்கியுள்ளது. இந்த சுற்றுச்சூழல் தொடர்பான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கையின் ஒரே கோழி உற்பத்தி நிறுவனம் நியூ அன்டனிஸ் ஆகும். 

இந்நிறுவனமானது இலங்கையில் உள்ள தனது சில்லறை விற்பனைத் தயாரிப்பு வரிசைகளில், இலங்கையின் முதல் முழுமையாகக் கம்போஸ்ட் செய்யக்கூடிய கோழி இறைச்சி பொதியிடலில் வழங்கப்படும் HarithaHari நுண்ணுயிர் எதிர்ப்பி இல்லா தயாரிப்பு வரிசை, Crizzpys உடனடியாக உண்ணக்கூடிய உறைநிலை உணவு வரிசை, தொழில்முறை சமையலறைகளுக்கான Chicken Havens HORECA தயாரிப்பு வரிசை மற்றும் Meatlery ஆடம்பர இறைச்சி சில்லறை விற்பனை வலையமைப்பு ஆகியவற்றை நடத்தி வருகிறது. கட்டம் 2 போட்டியாளர்கள், நாட்டின் மிகத் தேர்ந்தெடுத்த சமையல் கலைஞர்களாலும், மிகுந்த இலட்சியத்துடன் செயல்படும் ஏற்றுமதி கொள்முதல் நிறுவனங்களாலும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஒரு தயாரிப்புடன் பணியாற்றவுள்ளனர். இது வெறும் அனுசரணைக்காக முன்வைக்கப்படும் கூற்று அல்ல. தரநிலைக்கு இது அவசியம் என்பதே உண்மை.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

Mobitel 1278