Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
UNFPA CRJB சம்பியன் அந்தஸ்தைப் பெற்ற உலகின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி சாதனை படைத்துள்ளது

Aug 3, 2026 - 02:52 PM

UNFPA CRJB சம்பியன் அந்தஸ்தைப் பெற்ற உலகின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி சாதனை படைத்துள்ளது
Mobitel Inner 1278

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான நிறுவன கலாசாரத்தை மேம்படுத்துவதில், அர்ப்பணிப்புடன் கூடிய கவனத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA), வர்த்தகத்தில் இனப்பெருக்க நீதிக்கான கூட்டமைப்பினால் (CRJB) வழங்கப்படும் சம்பியன் (Champion Status) அந்தஸ்தைப் பெற்ற உலகின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரமானது, ஊழியர் நல்வாழ்வு, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் ஆகியவற்றை பிரதான வங்கித் தொழில்துறையில் ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவதோடு, நிலையான வணிக வளர்ச்சியை முன்னெடுப்பதில் வங்கியின் தலைமைத்துவத்தையும் பிரதிபலிப்பதாக அமைகின்றது. 

வங்கியின் இந்த உலகளாவிய சாதனை குறித்துக் கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்: 

இந்த அங்கீகாரமானது எமக்கு ஒரு கௌரவமாகவும் அதேநேரம் ஒரு பொறுப்பாகவும் அமைகின்றது. UNFPA CRJB இன் சம்பியன் அந்தஸ்தைப் பெற்ற உலகின் முதல் வங்கியாகத் திகழ்வது, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எமது ஊழியர்களை உண்மையிலேயே வலுப்படுத்தும் ஒரு பணியிடத்தைக் கட்டியெழுப்புவதற்கான எமது ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. ஊழியர் நல்வாழ்வு, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் ஆகியவை மேலோட்டமான விடயங்கள் அல்ல, மாறாக அவை நிலையான வணிகத்திற்கு மிக முக்கியமானவை என நாம் நம்புகிறோம். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட UNFPA தரநிலைகளுடன் எம்மை இணைத்துக்கொள்வதன் மூலம், எமது உள்ளக நடைமுறைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வங்கித் தொழில்துறை பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியையும் உருவாக்குகிறோம். இது எமது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நாம் சேவை செய்யும் சமூகங்கள் ஆகியவற்றிற்கு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். 

கொமர்ஷல் வங்கி இந்த உயர் நிலைக்குத் தெரிவு செய்யப்பட்டமையானது, வங்கியின் முன்மாதிரியான ஊழியர் நல்வாழ்வு திட்டங்கள் மற்றும் அதிக செல்வாக்கை ஏற்படுத்தும் சமூகப் பொறுப்புணர்வு (CSR) முன்னெடுப்புகளுக்கிடையிலான ஒரு வலுவான சமநிலையை அங்கீகரிக்கிறது. மேலும். உள்ளக முன்னெடுப்புகளாக வங்கி தனது ஊழியர்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதோடு, அவர்களது தனிப்பட்ட ஆளுமை மேம்பாட்டிற்கும் முக்கியத்துவமளிப்பதன் மூலம் ஊழியர்களின் நலன்களை பேணி வருகின்றது. 

வெளியக முன்னெடுப்புகளாக பெண் நுண்-தொழில்முனைவோர்களுக்கான விசேட மருத்துவ முகாம்கள், பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் பணியிடங்களில் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கான விசேட வழிகாட்டல் அமர்வுகள் போன்றவற்றின் மூலம் சமூக ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பல்வேறு கூட்டாண்மைகள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் தேசிய சுகாதார முன்னுரிமைகளுக்கும் வங்கி தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

Mobitel 1278