Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
வெற்றிக்கு உறுதுணையான கூட்டாண்மைகளை கௌரவிக்கும் ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ்

Aug 3, 2026 - 03:20 PM

வெற்றிக்கு உறுதுணையான கூட்டாண்மைகளை கௌரவிக்கும் ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ்
Mobitel Inner 1278

ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் (Hemas Consumer Brands) நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற அதன் தேசிய விற்பனை விருதுகள் – 2026 (National Sales Awards – 2026) நிகழ்வில், இலங்கை முழுவதிலும் இருந்து வருகை தந்த தமது நீண்டகால விநியோகஸ்தர்களைக் கௌரவித்துள்ளது. நாட்டின் மிகவும் நம்பகமான வீட்டுப் பெயர்களாக திகழும் வர்த்தகநாமங்களை மில்லியன் கணக்கான வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் அவர்களது அர்ப்பணிப்பு, ஸ்திரத்தன்மை, தொழில்முனைவு மனப்பான்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட நீண்டகால கூட்டாண்மைகளைக் கொண்டாடும் அதே வேளையில், தனது விநியோக வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு விநியோகஸ்தரின் வெற்றிக்காகவும் முதலீடு செய்வதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது. 

இலங்கையின் முன்னணியில் உள்ள நுகர்வோர் பொருட்கள் (FMCG) நிறுவனங்களில் ஒன்று எனும் வகையில், ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையாக சந்தையில் வெற்றிகரமாக போட்டியிட்டு முன்னணி வர்த்தகநாமங்களின் உற்பத்திகளை உருவாக்கியுள்ளது. பல தசாப்த கால உற்பத்தியின் விசேடத்துவம், தொடர்ச்சியான தயாரிப்பின் புத்தாக்கம், வலுவான பாரம்பரியம், ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச அங்கீகாரங்களால் கௌரவிக்கப்பட்ட பின்னணியைக் கொண்டு, தலைமுறை தலைமுறையாக நுகர்வோரின் நம்பிக்கையை நிறுவனம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் பின்னணியில், ஒவ்வொரு ஹேமாஸ் தயாரிப்பும் சில்லறை விற்பனையாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாப்பாகவும், திறம்படவும், சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் வலுவான விநியோக வலையமைப்பையும் கொண்டுள்ளது. 

இந்த விருது வழங்கும் விழாவானது, இக்கூட்டாண்மைகள் பல வருடங்களாக நீடித்துள்ள உறவுகளையும் பிரதிபலித்தது. அங்கீகரிக்கப்பட்ட பல நீண்டகால விநியோகஸ்தர்கள் பல வருடங்களாக நிறுவனத்துடன் இணைந்து வளர்ச்சி கண்டுள்ளனர். அவர்களின் தொடர்ச்சியான வெற்றியானது ஹேமாஸ் வணிக மாதிரியின் வலிமைக்கும், தமது கூட்டாளர்களுடன் இணைந்து வளர்வதற்கான நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கும் ஒரு சான்றாக விளங்குகிறது. 

இந்நிகழ்வு குறித்து ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் வணிக மேம்பாட்டு பணிப்பாளர் ஜகத் வெதகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது விநியோகஸ்தர்கள் எமது வெற்றியின் மிக வலுவான தூண்களில் உள்ளடங்குகின்றனர். 

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவர்கள் எமது வர்த்தகநாமங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், ஹேமாஸிடமிருந்து நுகர்வோர் எதிர்பார்க்கும் தரம், நம்பகத்தன்மை மற்றும் சேவையைப் பெறுவதை உறுதி செய்கிறார்கள். ஒவ்வொரு விநியோகஸ்தரையும் ஒரு நீண்டகால வணிக கூட்டாளராகவே நாம் பார்க்கிறோம். அத்துடன் கட்டமைக்கப்பட்ட ஆதரவு, செயற்பாட்டு விசேடத்துவம், தொடர்ச்சியான திறன் மேம்பாடு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட உறவு ஆகியவற்றின் மூலம் அவர்கள் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்க நாம் தொடர்ச்சியாக கடமைப்பட்டுள்ளோம். இக்கூட்டாண்மைகளின் வலிமை, நிலைபேறான தன்மை மற்றும் இலாபத்தன்மை ஆகியவற்றை, நாம் இவ்வருடம் கௌரவித்த பெருமளவான நீண்டகால விநியோகஸ்தர்கள் பிரதிபலிக்கின்றனர். அவர்களின் சாதனைகளை கொண்டாடுவதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.” என்றார். 

இது குறித்து ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சப்ரினா யூசுபலி தெரிவிக்கையில், “ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றியானது எப்போதும் வலுவான, நீடித்த கூட்டாண்மைகளின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய விற்பனை விருதுகள் – 2026 நிகழ்வானது, எமது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எம்முடன் இணைந்து நிற்கின்ற எமது விநியோகஸ்தர்களைக் கொண்டாடுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. அவர்களது சாதனைகளுக்கு வெகுமதியளிக்கும் அதே வேளையில், கூட்டு வெற்றிக்கு தொடர்ச்சியான தூணாக அமைகின்ற பகிரப்பட்ட மதிப்புகள், கூட்டுழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களுக்கு எமது நன்றிகளையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் தொடர்ச்சியாக இணைந்து வளர்ச்சியடைந்து, எதிர்வரும் ஆண்டுகளில் நுகர்வோருக்கு அதிக மதிப்பை உருவாக்கும் அதேவேளையில், இக்கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்த நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார். 

ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனம், விநியோகஸ்தர்களை தனது முழு மதிப்புச் சங்கிலியின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதுகிறது. அத்துடன் ஒவ்வொரு இலங்கையரின் வாழ்க்கையையும் வளப்படுத்துகின்ற நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நிறுவனத்தின் உற்பத்தி வசதிகளுக்கும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் இடையிலான இறுதி இணைப்பாக செயற்படும் விநியோகஸ்தர்கள், நகர்ப்புற, புறநகர் மற்றும் கிராமிய சந்தைகளில் அதன் தயாரிப்புகள் தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்து, ஹேமாஸ் எனும் பெயரிலிருந்து நுகர்வோர் எதிர்பார்க்கும் தரம் மற்றும் நம்பகத்தன்மையை பேணுகின்றனர். ஒரு போட்டி நிறைந்த சந்தையில் விநியோகஸ்தர்கள் நம்பிக்கையுடன் செயற்பட உதவும் வகையில், செயற்பாட்டு விசேடத்துவத்தை மேம்படுத்தவும், இறுதி எல்லை வரையான விநியோகத்தை பலப்படுத்தவும், சேவைத் தரங்களை உயர்த்தவுமான பயணத்தில் நிறுவனம் தனது கூட்டாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. 

ஒரு நிலைபேறான வணிகத்தைக் கட்டியெழுப்ப விரும்பும் தொழில்முனைவோருக்கு, ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தராக மாறுவது என்பது இலங்கையின் மிகவும் போற்றப்படும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றுடன் கைகோர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். முன்னணி வர்த்தகநாமங்களுக்கான அணுகலுக்கு அப்பால், நீண்டகால உறவுகளை மதிக்கின்ற மற்றும் தனது வணிகக் கூட்டாளர்களின் வளர்ச்சியில் உண்மையான அக்கறையுடன் முதலீடு செய்யும், நிறுவனத்தின் ஒரு அங்கமாக விநியோகஸ்தர்கள் உள்ளடங்குகிறார்கள். 

Hemas Consumer Brands பற்றி 

60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

Mobitel 1278