Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
அமெரிக்க கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் தடை

Aug 3, 2026 - 05:04 PM

அமெரிக்க கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் தடை
Mobitel inner

அபுதாபி T10 லீக்கில் ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிமுறையின் மூன்று பிரிவுகளை மீறியதால் ஆஃப் ஸ்பின் சுழற்பந்து வீச்சாளரான அகிலேஷ் யாதவ், 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

2025 - 26 அபிதாபி T10 தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னரான பி. அகிலேஷ் யாதவ் அஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார். 

போட்டிகளின் முடிவு, நடத்தை அல்லது வேறு ஏதேனும் அம்சத்தை சரிசெய்ய சூழ்ச்சி செய்ய அல்லது முறையற்ற முறையில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பது அல்லது முறையற்ற முறையில் செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு உடன்படிக்கை அல்லது முயற்சியில் பங்கெடுப்பது. 

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளின்போது மற்றொரு பங்கேற்பாளரை தூண்டுவது, ஆசை காட்டுவது, இணங்க வைப்பது, ஊக்குவிப்பது, அல்லது வேண்டுமென்றே வசதி செய்து கொடுப்பது. 

விசாரணைக்குத் தொடர்புடையதாக இருக்கக்கூடிய தரவுகளையும் செய்திகளையும் ஒரு மொபைல் சாதனத்திலிருந்து நீக்குவதன் மூலம் விசாரணைக்குத் தடை ஏற்படுத்துவது. 

ஆகிய மூன்று விதிகளை அவர் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஐசிசி-யின் ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஐசிசி-யின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அவர் குற்றம் செய்ததை உறுதி செய்தது. 

இதனால் கடந்த நவம்பர் மாதம் 2025 ஆம் திகதியில் இருந்து 8 காலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 26 வயதான அகிலேஷ் ரெட்டி அமெரிக்கா அணிக்காக 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara