Header Logo
Vallibel FD
Selan Bank
கிழக்கு
துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு!

Aug 4, 2026 - 01:46 PM

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு!
Mobitel Inner 1278

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 02 ஆம் திகதி இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். 

முறைப்பாட்டையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த களுவாஞ்சிகுடி பொலிஸார், நேற்று (03) திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் அனைத்தையும் மீட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் குறித்த யுவதியையும் கைது செய்துள்ளனர். 

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த குறித்த யுவதி, பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த நிலையில் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதீப் களுபாலவின் வழிகாட்டுதலில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் லீலாரெத்னவின் பணிப்புரைக்கமைய, களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பத்திகாரி ஆர்.யூட் றொமேஸின் நேரடிக் கண்காணிப்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி. ஜோய் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையையும் நகைகள் மீட்பையும் மேற்கொண்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட 24½ பவுண் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான யுவதி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278