Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
SLT-MOBITEL இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் இலங்கையின் முன்னணி நிலைபேறான ICT வர்த்தக நாமத்திற்கான விருதை சுவீகரிப்பு

Aug 6, 2026 - 01:44 PM

SLT-MOBITEL இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் இலங்கையின் முன்னணி நிலைபேறான ICT வர்த்தக நாமத்திற்கான விருதை சுவீகரிப்பு
Mobitel Inner 1278

இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரும், நாட்டின் முன்னணி ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் வர்த்தகநாமமுமான SLT-MOBITEL, இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் (SSA) 2026 இல் நிலைபேறான தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர் பிரிவின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கௌரவிப்பினூடாக, தேசத்தின் டிஜிட்டல் மாற்றச் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், தனது வர்த்தக செயற்பாடுகளில் நிலைபேறாண்மைக்கு முக்கியத்துவமளிப்பதற்கான SLT-MOBITEL இன் ஒப்பற்ற அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தேசத்தின் நம்பிக்கையை வென்ற தகவல் தொடர்பாடல் வர்த்தக நாமம் எனும் வகையில் SLT- MOBITEL, சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) கோட்பாடுகளை தனது செயற்பாடுகள், முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முன்னிலை வகிக்கின்றது. வாடிக்கையாளர்கள், சமூகங்கள் மற்றும் சூழல் ஆகியவற்றுக்கு நிலைபேறான பெறுமதியை ஏற்படுத்துவதில் நிறுவனம் காண்பிக்கும் நீண்ட கால அர்ப்பணிப்பை இந்த விருது பிரதிபலிப்பதுடன், ஸ்மார்ட்டான, பசுமையான மற்றும் அதிகளவு இணைக்கப்பட்ட இலங்கையை கொண்டிருப்பதில் நிறுவனம் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. 

இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் (SSA) என்பது நிலைபேறான்மையை முன்னெடுப்பதில் சிறந்த தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் அளவிடக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்தும் நிறுவனங்களை கௌரவித்து கொண்டாடும் முன்னணி தேசிய கட்டமைப்பாக அமைந்துள்ளது. சர்வதேச காலநிலை இலக்குகள் மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் ஆகியவற்றுடன் பொருந்தும் வகையில் அமைந்துள்ள இந்த விருதுகளினூடாக, தொழில்னுட்பம், வலு, உட்கட்டமைப்பு, உற்பத்தி, நிதி, கல்வி, ஊடகம் மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற 50 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் சிறப்பை கௌரவிக்கின்றது. 

தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப பிரிவில் வெற்றியீட்டியுள்ளமையினூடாக, எதிர்காலத்திற்கு தயாரான டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதில் SLT-MOBITEL இன் தலைமைத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொறுப்பு வாய்ந்த வியாபார செயன்முறைகளை பின்பற்றுவதையும் உறுதி செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க வலு, வலுச் சிக்கனமான உட்கட்டமைப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், காலநிலை செயற்பாடு, பொறுப்பு வாய்ந்த ஆளுகை மற்றும் சமூக வலுவூட்டும் செயற்பாடுகள் போன்றவற்றில் மூலோபாய ரீதியான முதலீட்டுகளினூடாக நிலைபேறான வளர்ச்சியில் தொழிற்துறையில் நியமங்களை நிறுவனம் தொடர்ந்தும் பதிவு செய்த வண்ணமுள்ளது. 

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைபேறான கட்டமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDGs) போன்றவற்றினூடாக வழிநடத்தப்படுவதுடன், நேர்த்தியான சூழல் மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்துவதற்கான திறவுகோலாக தொழில்னுட்பத்தை அமைந்திருக்கச் செய்வதில் SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளது. நிறுவனத்தின் நீண்ட கால மூலோபாயத்தினுள் நிலைபேறாண்மை ஆழமாக ஊடுருவி, புத்தாக்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த வளர்ச்சி ஆகியன சமாந்தரமாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்கிறது. 

இந்த பெருமைக்குரிய கௌரவிப்பினூடாக, இலங்கையின் முன்னணி நிலைபேறான தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப வர்த்தக நாமம் எனும் SLT-MOBITEL இன் நிலையை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், புத்தாக்கமான டிஜிட்டல் இணைப்புத்திறனினூடாக தேசத்தின் வளர்ச்சிக்கு வலுவூட்டுவதற்கான தனது அர்ப்பணிப்பையும் மீள உறுதி செய்து, மீட்சியான, உள்ளடக்கமான மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கும் சூழலுக்கு பொறுப்பு வாய்ந்த வகையில் தேசத்தை கட்டியெழுப்புவதையும் உறுதி செய்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

Mobitel 1278