Header Logo
வணிகம்
Spider-Man: Brand New Day திரைப்படத்திற்காக இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீட்டை நடத்தி, ஸ்கோப் சினிமாஸ் திரைப்பட வெளியீட்டு விழாக்களில் புதி

Aug 6, 2026 - 02:24 PM

Spider-Man: Brand New Day திரைப்படத்திற்காக இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீட்டை நடத்தி, ஸ்கோப் சினிமாஸ் திரைப்பட வெளியீட்டு விழாக்களில் புதி
Mobitel inner

ஸ்கோப் சினிமாஸ் நிறுவனம், Sony Pictures Releasing International நிறுவனத்துடன் இணைந்து, பிரமாண்டமான திரைப்பட வெளியீட்டு நிகழ்வொன்றை நடத்தியதன் மூலம் இலங்கையில் ஹொலிவூட் திரைப்பட வெளியீட்டு விழாக்களின் தரத்தை அடுத்த மட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இரசிகர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு தொடர் அனுபவங்கள் மூலம், நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய திரைப்பட வெளியீட்டு விழாவாக இது கருதப்படுகிறது. இந்த நிகழ்வுகள் ஒரு பிரத்தியேக செங்கம்பள வரவேற்பு வைபவம் மற்றும் இலங்கையின் முதல் திரைப்பட கருப்பொருள் கொண்ட ட்ரோன் தொழில்நுட்பக் காட்சியுடன் நிறைவடைந்தன. 

City of Dreams Sri Lanka-வில் உள்ள The Shoppes-இல் நடைபெற்ற இந்த முதல்நாள் வெளியீட்டு விழா, சமீபத்திய பிரமாண்ட வெற்றித் திரைப்படமான ஸ்பைடர்-மேன்-இன் பிரத்தியேக முதல் நாள் திரையிடலுக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்களையும் விருந்தினர்களையும் ஒன்றிணைத்தது. புகழ்பெற்ற மார்வெல் சூப்பர் ஹீரோவால் ஈர்க்கப்பட்ட ஒரு பிரமிக்க வைக்கும் ட்ரோன் காட்சியுடன் அந்த மாலைப்பொழுது இனிதாக நிறைவடைந்தது. இது இலங்கையின் பொழுதுபோக்குத் துறைக்கு ஒரு சாதனை மைல்கல்லாக அமைந்த தருணத்தை உருவாக்கியதுடன், பிரமாண்ட திரைப்பட வெளியீடுகளுக்கு ஒரு புதிய தர ஒப்பீட்டு அளவுகோலையும் ஏற்படுத்தியுள்ளது. 

திரைப்பட வெளியீட்டிற்கு முன்பதாக, Liberty Lands & Developments மற்றும் Next Frame Global ஆகியவற்றுடன் இணைந்து, அத்திரைப்படத்தின் வெளியீட்டை ஒரு நாடு தழுவிய கொண்டாட்டமாக Sony Pictures Releasing International மாற்றியது. யாழ்ப்பாணம், குருநாகல், கட்டுகஸ்தோட்டை, கண்டி, கேகாலை, மொரட்டுவை, கம்பஹா, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள இரசிகர்களுக்கு ஸ்பைடர்மேனை நேரில் சந்திப்பதற்கும், 

இடைத்தொடர்பாடும் அனுபவங்களில் பங்கேற்பதற்கும், உத்தியோகபூர்வ ஸ்பைடர்மேன் பொருட்களைப் பெறுவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹொலிவூட் வெளியீடுகளில் ஒன்றான இத்திரைப்படத்தைச் சுற்றியுள்ள உற்சாகத்தில் நாடு முழுவதுமுள்ள பார்வையாளர்கள் ஒரு அங்கமாகினர். இந்தக் கொண்டாட்டங்களில், கொழும்பு வழியாகப் பயணித்த Spidey Bus பேரூந்தும் அடங்கியிருந்தது. இது ஸ்பைடர்மேன் உலகத்தை பல்லாயிரக்கணக்கான இரசிகர்களுக்கு நேரடியாகக் கொண்டுபோய்ச் சேர்த்ததுடன், திரைப்பட வெளியீட்டிற்கு முன்னதாக நகரம் முழுவதும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. 

இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த ஸ்கோப் சினிமாஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் நவீத் காதர் அவர்கள், “உலகின் முன்னணிப் பொழுதுபோக்கு சந்தைகளுக்கு நிகரான அனுபவங்களை பார்வையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்கோப் சினிமாஸ் எப்போதும் உழைத்து வருகின்றது. Spider-Man: Brand New Day திரைப்படத்தின் முதல்நாள் காட்சி, திரையரங்கையும் தாண்டி நீடிக்கும் மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் திரைப்படக் காட்சித் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கை உள்ளூர் பார்வையாளர்களுக்குக் கொண்டு வரும் எங்கள் பயணத்தில் இது மற்றொரு சாதனை மைல்கல் ஆகும், என்றார். 

Liberty Lands & Developments Pvt. Ltd நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறைக்கான குழும பொது முகாமையாளர் சாஸி கோர்டெஸ் அவர்கள் மேலும் கூறுகையில்: “Spider-Man: Brand New Day மூலம், இரசிகர்களுக்கு அவர்கள் இதற்கு முன் பெற்றிராத ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கமாக இருந்தது. பல நகரங்களில் உள்ள இரசிகர்கள் அந்த கதாபாத்திரத்தைச் சந்திக்கவும், இடைத்தொடர்பாடவும் அனுபவங்களை அனுபவிக்கவும், உத்தியோகபூர்வ பொருட்களைப் பெறவும் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், நாங்கள் ஸ்பைடர்-மேனை திரையரங்குகளுக்கு அப்பால் கொண்டு சென்றோம். இது இலங்கையில் இதற்கு முன் ஒருபோதும் சாத்தியமில்லாத ஒன்றாகும். கொழும்பு முழுவதும் Spidey Bus பேரூந்தை எடுத்துச் சென்றது முதல், இலங்கையின் முதல் திரைப்படக் கருப்பொருள் கொண்ட ட்ரோன் தொழில்நுட்பக் காட்சி மற்றும் எங்களின் முதல் பல இடங்களில் திரையிடலை ஏற்பாடு செய்தது வரை, நாடு முழுவதும் உள்ள இரசிகர்களுக்கு இது ஒரு உண்மையான மறக்க முடியாத கொண்டாட்டமாக அமைய ஒவ்வொரு அம்சமும் வடிவமைக்கப்பட்டது. 

Next Frame Global நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேனியலா நோபில் அவர்கள் கூறுகையில், “உலகின் மிகவும் புகழ்பெற்ற திரைப்படத் தொடர்களில் ஒன்றான Spider-Man: Brand New Day படத்தின் பிரமாண்டத்திற்கும், விறுவிறுப்பிற்கும் ஏற்ற ஒரு வெளியீடு உண்மையிலேயே அதற்குத் தேவைப்பட்டது. இலங்கை முழுவதும் உள்ள பார்வையாளர்கள், திரையரங்கையும் தாண்டி விரிந்த அனுபவங்கள் மூலம் இப்படத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது, உலகத் தரம் வாய்ந்த திரையரங்கு நிகழ்வுகளுக்கான ஆர்வம் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. திரையரங்கு பொழுதுபோக்கின் தரத்தை தொடர்ந்து உயர்த்துவதோடு, உலகத் திரைப்படத் துறையில் இலங்கையின் இடத்தையும் வலுப்படுத்தும் வழிகளில், உலகளாவிய ஸ்டூடியோ வெளியீடுகளை இலங்கை பார்வையாளர்களுக்குக் கொண்டுவர ஸ்கோப் சினிமாஸ் உடன் கூட்டு சேர்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 

இந்த முதல்நாள் காட்சி, உலகத் தரம் வாய்ந்த திரையரங்கு அனுபவங்களை வழங்குவதிலும், இலங்கையில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வண்ணம் புதுமையான பார்வையாளர் ஈடுபாட்டு முயற்சிகளை அறிமுகப்படுத்துவதிலும் ஸ்கோப் சினிமாஸ் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முதலீட்டைப் பிரதிபலிக்கிறது. 

Sony Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், உலகளவில் கொண்டாடப்படும் ஸ்பைடர்-மேன் தொடரின் சமீபத்திய அத்தியாயமான Spider-Man: Brand New Day, சினிமாவின் மிகவும் வெற்றிகரமான சூப்பர் ஹீரோ கதைகளில் ஒன்றைத் தொடரும் ஒரு புதிய சாகசத்தில் பீட்டர் பார்க்கரை மீண்டும் வெள்ளித்திரைக்குக் கொண்டுவருகிறது. இப்படம் 2026 ஜூலை 30 அன்று இலங்கை முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 

Next Frame Global நிறுவனம் தொடர்பான விபரங்கள் இலங்கையில் திரைப்பட விநியோகத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் நோக்கில் Next Frame Global நிறுவப்பட்டது. இத்துறையில் உள்ள நீண்டகால அனுபவம் மற்றும் திரைப்படங்கள் மீதான மிகுந்த ஆர்வத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களை உள்ளூர் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதுடன், உலகளாவிய பொழுதுபோக்குத் துறையுடன் இணைவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. வெறும் விநியோகத்தைத் தாண்டிய தொலைநோக்குப் பார்வையுடன், முன்னணி சர்வதேச ஸ்டூடியோக்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்கவும், புதுமை, தொழில்முறை அணுகுமுறை மற்றும் எதிர்கால நோக்குடைய செயல்பாடுகள் மூலம் மறக்க முடியாத திரைப்பட அனுபவங்களை வழங்கவும் இந்நிறுவனம் தனது இலக்காகக் கொண்டுள்ளது. நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இலங்கை மற்றும் சர்வதேசச் சந்தைகள் என இரண்டிலும் திரைப்பட விநியோகத் துறையில் ஒரு நம்பகமான பெயராகத் திகழ்வதே இதன் இலட்சியமாகும். Next Frame Global நிறுவனமானது Sony Pictures Releasing International, Warner Bros. Pictures மற்றும் Disney ஆகியவற்றின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராகச் செயல்படுகிறது. 

ஸ்கோப் சினிமாஸ் நிறுவனம் தொடர்பான விபரங்கள் 

ஸ்கோப் சினிமாஸ் இலங்கையின் முன்னணித் திரையரங்க நிறுவனமாகும். இது அதிநவீனத் திரையிடல் தொழில்நுட்பம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய திரைப்படங்கள் மூலம் உலகத்தரம் வாய்ந்த திரையரங்க அனுபவங்களை வழங்குகிறது. நாட்டின் ஒரே IMAX திரையைக் கொண்டிருப்பதோடு, தொடர்ச்சியான புத்தாக்க முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள ஸ்கோப் சினிமாஸ், உலகின் மிகப்பெரிய திரைப்படங்களை உயர்தரத் திரையரங்க அனுபவங்கள் வாயிலாக இலங்கை இரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம், திரைப்படங்களைப் பார்க்கும் அனுபவத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி வருகிறது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara