Header Logo
Vallibel FD
Selan Bank
கிழக்கு
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

Sep 22, 2026 - 10:46 AM

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!
Mobitel Inner 1278

கடந்த காலங்களிலே நீதிபதிகளைத் தங்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்குமாறு பல அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று எந்தவொரு அரசியல் அழுத்தமும் கிடையாது. அவர்கள் நீதியாக, சுதந்திரமான கட்டமைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் இன்று கைதுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற கைதுகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலவிதமான கருத்துக்களை மக்கள் மத்தியிலே குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விசாரணைகள் தொடர்பாக இவர்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் விசாரணை அதிகாரிகளிடம் சென்று தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தார்கள். 

இது நேற்றோ அல்லது அதற்கு முந்தைய தினமோ இடம்பெற்ற விசாரணை கிடையாது. மிக நீண்ட காலமாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன. ஆனால் இவர்கள் ஏதோ ஒரு காரணத்தை அல்லது தங்களது இருக்கின்ற அரசியல் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு தப்பித்துக் கொண்டிருந்தார்கள். 

ஆனால் இன்று, இந்த சட்டங்கள் பொதுவானதாகவும் மக்களுக்கு சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுகின்ற ஒரு சட்டக் கட்டமைப்பை நாங்கள் இன்று உருவாக்கியிருக்கின்றோம். பொலிஸார் சுயாதீனமாகத் தங்களது விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். 

விசாரணை அதிகாரிகளுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் நாங்கள் பிரயோகிக்கவில்லை. அரசியல் அழுத்தங்கள் இல்லாத ஒரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். அரச அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளைச் சுதந்திரமாக இன்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

இதிலே நீதிப் பிரிவை நாங்கள் விசேடமாகக் குறிப்பிட வேண்டும். கடந்த காலங்களிலே நீதிபதிகளைத் தங்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்குமாறு பல அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று எந்தவொரு அரசியல் அழுத்தமும் கிடையாது. 

அவர்கள் நீதியாக, சுதந்திரமான கட்டமைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விசாரணைகளை அவர்கள் விசாரித்து, அதன் வெளிப்பாடுகளைத் தான் இன்று கைதுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

ஆகவே இதிலே எந்தவொரு அரசியல் பழிவாங்கலும் கிடையாது. இந்தக்க கைதுகள் விசாரணை அடிப்படையிலேயே தான் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும், தங்களது ஊழலுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட அநீதிக்கு எதிரான விசாரணை சுயாதீனமாக, சுதந்திரமாக இடம்பெற்று அதற்கான தண்டனைகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

எதிர்க்கட்சிகள் கூறுகின்றவாறு, முன்னர் தங்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் இடம்பெறப் போவதாக அரசாங்கம் குறிப்பிட்டதாகவும், வாக்குறுதிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று கைதுகள் இடம்பெறும்போது "அரசியல் பழிவாங்கல்" என்று அதற்குப் பெயர் சூட்டியிருக்கின்றார்கள். ஆகவே இந்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மக்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தியின் அரசு மேற்கொள்கின்ற அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் ஆதரவை இழந்த இந்த அரசியல்வாதிகள் தான் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Mobitel 1278