Header Logo
செய்திகள்
தெரண - சிக்னல் கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா பி.ப 1.00 மணிக்கு ஆரம்பம்

Aug 9, 2026 - 12:56 PM

தெரண - சிக்னல் கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா பி.ப 1.00 மணிக்கு ஆரம்பம்
Mobitel inner

இலங்கையில் ஏற்பாடு செய்யப்படும் முதலாவதும் ஒரே சர்வதேச பட்டத் விழாவான 'தெரண சிக்னல் கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா' இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

போட்டியாளர்களுக்கான பதிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகின. 

கொழும்பு வானத்தை வண்ணமயமாக்கும் இந்த விழாவை தெரண ஊடக வலையமைப்பு, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் மற்றும் இலங்கை பொலிஸ் இணைந்து 6ஆவது முறையாக ஏற்பாடு செய்துள்ளன. 

சர்வதேச பட்டம் விடும் கூட்டமைப்பின் (International Kite Federation) தரவுகளின்படி, உலகளவில் நடைபெறும் 62 மிகப்பெரிய பட்டம் விடும் விழாக்களில் 9ஆவது இடத்தில் உள்ள இத்திருவிழா, அந்த அமைப்பின் பதிவு மற்றும் மேற்பார்வையின் கீழ் இலங்கையில் நடைபெறும் ஒரே சர்வதேச பட்டம் விடும் விழாவாகும். 

இம்முறையும் கொழும்பு சர்வதேச பட்டத் திருழாவில் 2,500 உள்ளூர் போட்டியாளர்களுடன், 6 கண்டங்களைச் சேர்ந்த 30 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 80 வெளிநாட்டுப் பட்டக் கலைஞர்களும் இன்று கலந்துகொள்ளவுள்ளனர். 

இன்று 08 போட்டிப் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. 

அந்தப் போட்டிப் பிரிவுகளாவன: 

ஆக்கப்பூர்வமான பட்டம் 

தெரண சின்னம் பொறிக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான பட்டம் 

சிக்னல் சின்னம் பொறிக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான பட்டம் 

மேஜிக் ஐஸ்கிரீம் மிகவும் வண்ணமயமான பட்டம் 

கொத்மலை மிகவும் அழகிய அலங்காரங்கள் கொண்ட பட்டம் 

சன்கிரஷ் கலைநயமிக்க மயில் பட்டம் 

DSI Beat மிகவும் அழகான பட்டம் (15 வயதுக்கு உட்பட்டோர்) 

சிக்னல் இரவுப் பட்டம் 

இவ்விழாவில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பட்டக் கலைஞர்களும் இன்று காலை முதலே காலி முகத்திடலுக்கு வருகை தந்துள்ளனர். 

இதேவேளை, பொலிஸாரினால் காலி முகத்திடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று விசேட போக்குவரத்து திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

விழாவிற்கு வருகை தரும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக கொழும்பு நகரப் பகுதியில் 21 வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பட்டம் விடும் விழாவின் நிறைவில் இன்று இரவு 7.30 மணிக்கு காலி முகத்திடலில் 'தெரண BOOM TOWN இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

இவ்விசை நிகழ்ச்சியை இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற 'அவதார்' (Avatar) இசைக்குழுவினர் வழங்கவுள்ளனர்.

 


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara