Header Logo
செய்திகள்
சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு

Aug 10, 2026 - 07:02 PM

சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு
Mobitel inner

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.


இவ்வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் போது இரு தரப்பினதும் சமர்ப்பணங்கள் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிணை உத்தரவைப் பிரகடனப்படுத்துவதை நீதவான் ஒத்திவைத்தார்.


இதற்கமைய, சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் ஆராயப்பட்டு, 17 பக்கங்களைக் கொண்ட பிணை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டது.


இதன்போது, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் சாகர காரியவசத்தைப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.


பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னர், சாகர காரியவசத்தை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாகச் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளைத் தொடங்கியிருந்தது.


குறித்த விசாரணை தொடர்பான செய்திகள் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில், வாக்குமூலம் அளிப்பதற்காகச் சாகர காரியவசத்தை இன்று (10) முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கமைய, இன்று முற்பகல் அப்பணியகத்திற்கு வருகை தந்த சாகர காரியவசமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.


பின்னர் அவர் இன்று பிற்பகல் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


இதன்போது, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்படப் பலர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara