Header Logo
SLIC
Rhythams of Lanka
விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி வாய்ப்பை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி!

Aug 13, 2026 - 05:46 PM

உலகக் கிண்ண தகுதி வாய்ப்பை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி!
Mobitel inner

சமீபத்தில் அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம், தரவரிசையில் இறுதி நேரடித் தகுதி இடத்தை உறுதி செய்தது. 

மேற்கிந்திய தீவுகள் அணி 2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது. 2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு, செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான ஐசிசி (ICC) ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகளும், போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் நேரடியாகத் தகுதிபெறும். 

சமீபத்தில் அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம், தரவரிசையில் இறுதி நேரடித் தகுதி இடத்தை உறுதி செய்தது. தற்போது இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன. 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தியாவுக்கு எதிராக 2 போட்டிகள் மீதமிருந்தாலும், அதில் வெற்றி பெற்றாலும் ஆப்கானிஸ்தானை முந்த முடியாது என்பதால் நேரடி வாய்ப்பை இழந்துள்ளது. 

நேரடி வாய்ப்பைத் தவறவிட்ட மேற்கிந்திய தீவுகள் அணி, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கத் 'தகுதிச் சுற்று' (Qualifiers) போட்டிகளில் விளையாட வேண்டும். 

வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, CWC லீக் 2 இன் சிறந்த அணிகள் மற்றும் Qualifier Play-offs மூலமாக வரும் அணிகள் என மொத்தம் 10 அணிகள் மோதும் 'ICC World Cup Qualifier' தொடரில் விளையாட வேண்டும். இந்தத் தகுதிச் சுற்றுத் தொடரில் வெற்றி பெற்றாலோ அல்லது இறுதிப் போட்டி வரை முன்னேறினாலோ 2027 உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற முடியும். 

தகுதிச் சுற்றில் வெல்லத் தவறினாலும், 2 ஆவது முதல் 4 ஆவது இடங்களுக்குள் நிறைவு செய்தால் 'சூப்பர் சீரிஸ்' (Super Series play-off) சுற்றில் விளையாடி, இறுதி வாய்ப்பைப் பெறப் போராடலாம். கடந்த 2023 உலகக் கிண்ணத்திற்கு தகுதிச் சுற்றிலும் தோல்வியடைந்து, வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

Mobitel Upahara