Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக அவதானம்

Aug 13, 2026 - 04:36 PM

வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக அவதானம்
Mobitel inner

சத்தம் மாற்றியமைக்கப்பட்ட, அசல் வடிவம் மாற்றப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இன்று (13) இதனைத் தெரிவித்தார். 

மோட்டார் சைக்கிள்களில் குழுக்களாக பயணிக்கும் சிலர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விபரீதமான மனநிலையுடன் வாகனங்களைச் செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்தகைய நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் அளிக்காமல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். 

அத்துடன், 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.


MOST READ

காணொளி
நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

Mobitel Upahara