Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
வருடத்தில் வீதி விபத்துக்களால் பறிபோன 1,693 உயிர்கள்

Aug 13, 2026 - 04:13 PM

வருடத்தில் வீதி விபத்துக்களால் பறிபோன 1,693 உயிர்கள்
Mobitel inner

2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 1,605 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 1,693 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இதனைத் தெரிவித்தார். 

உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகளும், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், மோட்டார் சைக்கிளில் 119 பின்னாலமர்ந்து பயணித்தோரும், 115 மிதிவண்டி ஓட்டுநர்களும், 136 சாரதிகளும் மற்றும் 162 பயணிகளும் அடங்குவர் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், இதுவரையில் 3,125 பாரிய விபத்துக்களும், 6,477 சிறு விபத்துக்களும் மற்றும் 2,388 சேதமடைந்த விபத்துக்களும் பதிவாகியுள்ளன. 

எவ்வாறாயினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

Mobitel Upahara