Header Logo
SLIC
Rhythams of Lanka
இந்தியா
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்! செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

Aug 15, 2026 - 08:02 AM

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்! செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
Mobitel inner

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். 

செங்கோட்டைக்கு வந்த இந்திய பிரதமரை பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.. அதன்பிறகு முப்படை மற்றும் டெல்லி காவல்துறை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார். 

அதன்பிறகு, விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். 

தனது உரையில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய பிரதமர் உரையாற்றினார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக துணிச்சலுடன் போராடி, தியாகம் செய்து, அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூருகிறோம். 

அவர்கள் கண்ட கனவுகள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து நமக்கு ஊக்கமளித்து வருகின்றன.140 கோடி இந்தியர்களின் சக்தியால், நாட்டின் பல்வேறு துறைகளிலும் இந்தியா புதிய உச்சங்களை நோக்கி முன்னேறி வருகிறது. வரும் காலங்களில் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமாகவும் சிறப்பாகவும் தொடர்ந்து முன்னேறட்டும்"என்றார்.


MOST READ

காணொளி
செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

Mobitel Upahara