Header Logo
SLIC
Rhythams of Lanka
ஏனையவை
முதல் முறையாக அதிகளவான ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் திட்டம்!

Aug 17, 2026 - 12:30 PM

முதல் முறையாக அதிகளவான ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் திட்டம்!
Mobitel inner

இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக நாட்டின் பல மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், தொலைபேசிகளை வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் படைத்துள்ளது. 

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு, வெள்ளவத்தை தனியார் ஹோட்டலில் நேற்று (16) காலை இடம்பெற்றபோதே இலண்டனின் பிரபல தொழிலதிபரும், பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் 65 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகளும், 25 ஊடகவியலாளர்களுக்கு தொலைபேசிகளும் என சுமார் 1.5 கோடி ரூபா மதிப்புள்ள இலத்திரனியல் உபரணங்களை வழங்கியே இந்த வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது 

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீகஜன், செயலாளர் கே.ஜெயந்திரன் ஆகியோர் தலைமையில், நாட்டிய கலைமணி ஸ்ரீமதி பவானி குகப் பிரியாவின் நெறியாள்கையில் தியாகராஜ கலைக்கோவில் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலண்டனின் பிரபல தொழிலதிபரும், பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸ் பங்கேற்றார். 

சீவரட்ணம் முறேஸின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்கு ஆளுயர மலர்மாலைகள், தலைக்கிரீடம் அணிவிக்கப்ட்டும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டது அவரின் சமூக சேவைகளை பாராட்டி பாராட்டுக் கவிதை காணொலியும் வெளியிடப்பட்டது. 

அவர் தனது உரையின் போது தான் சிறு வயதில் பட்ட துன்பங்கள், வறுமையில் வாடிய தனது தாயார் தன்னை வளர்க்கபட்ட கஷ்டங்களை மிகவும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார். 

சிறப்பு விருந்தினர்களாக எம்.செந்தில்நாதன், மூத்த ஊடகவியலாளரான என்.வித்தியாதரன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.வீரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.


MOST READ

காணொளி
பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

Mobitel Upahara