Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
Samsung இன் Galaxy Z Fold8 தொடருக்கான முன்பதிவுகள் பிரத்தியேக அறிமுக சலுகைகளுடன் ஆரம்பம்

Aug 17, 2026 - 04:13 PM

Samsung இன் Galaxy Z Fold8 தொடருக்கான முன்பதிவுகள் பிரத்தியேக அறிமுக சலுகைகளுடன் ஆரம்பம்
Mobitel Inner 1278

Samsung ஸ்ரீலங்கா, தனது அதிநவீன Galaxy Z Fold8 தொடருக்கான முன்பதிவுகளை (Pre-Orders) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் Samsung இன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை முதன்முறையாகப் சொந்தமாக்கிக் கொள்ள முடிவதுடன், பல்வேறு பிரத்யேக முன்பதிவு சலுகைகளையும் பெற முடியும். 

புதிய Galaxy Z Fold8 தொடரானது, அதன் பிரீமியம் வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, Galaxy Z Fold8 Ultra கையடக்கத் தொலைபேசி Violet Shadow மற்றும் Graphite ஆகிய நிறங்களிலும், Galaxy Z Fold8 கையடக்கத் தொலைபேசி Lavender மற்றும் Graphite ஆகிய நிறங்களிலும் வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும். 

முன்பதிவு காலத்தில் சாதனங்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 87,000 மதிப்பிலான சிறப்பு விலைக் குறைப்புச் சலுகை மற்றும் ரூ. 621,625 மதிப்பிலான உட்புறத் திரை (Inner Screen) மற்றும் ரூ. 76,267 மதிப்பிலான முகப்புத் திரைகளை (Cover Screen) உள்ளடக்கிய, இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் 2 முறை இலவசமாகத் திரையை மாற்றிக் கொள்ளும் சலுகையும் அடங்கும். மேலும், Dialog மற்றும் Mobital வலையமைப்புகள் ஊடாக 4 மாதங்களுக்கு 1TB மொபைல் Data, மேம்பட்ட Gemini AI அம்சங்கள் மற்றும் 5TB கிளவுட் சேமிப்பகத்துடன் (Storage) கூடிய ரூ. 37,470 மதிப்புள்ள 6 மாத Google AI Pro சந்தா ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இத்துடன் Samsung Easy Pay மூலம் 24 மாதங்கள் வரையிலான வட்டி இல்லாத எளிய மாதத்தவணை முறையிலும் இச்சாதனங்களைக் கொள்வனவு செய்ய முடியும். 

இந்த முன்பதிவு குறித்து Samsung ஸ்ரீலங்காவின் நிர்வாகப் பணிப்பாளர் திரு. சங்ஹ்வா சோங் கருத்து தெரிவிக்கையில், “எமது புதிய Galaxy மடிக்கக்கூடிய (foldables) ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் உற்சாகமளிக்கிறது. இலங்கையில் இதன் முன்பதிவுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Samsung இன் மிக நவீன தொழில்நுட்பத்தை அனைவரையும் விட முதன்முதலாக அனுபவிக்கும் வாய்ப்பை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எங்களின் முதன்மை நோக்கமாகும். அதேபோல், நாடு தழுவிய ரீதியிலுள்ள எமது நம்பிக்கைக்குரிய விநியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு மற்றும் பிரத்தியேகச் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மதிப்பையும், சலுகைகளையும் வழங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம், எனக் குறிப்பிட்டார். 

இந்த முன்பதிவுகளை 2026 ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை மேற்கொள்ள முடியும் என்பதுடன், ஜோன் கீல்ஸ் ஆபிஸ் ஆட்டோமேஷன் JKOA), Softlogic, Singer, Singhagiri, Dialog, Mobitel மற்றும் நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து Samsung அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்கள் ஊடாகவும் வாடிக்கையாளர்கள் தங்களது முன்பதிவுகளை மேற்கூறப்பட்ட திகதி வரை பதிவு செய்து கொள்ள முடியும். கையிருப்புக்கள் குறைந்த அளவில் உள்ளதால், முன்பதிவுக்காக வழங்கப்படும் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முடிந்தவரை விரைவாக உங்களது பதிவுகளை மேற்கூறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 

முன்பதிவு அல்லது தயாரிப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு Samsung வாடிக்கையாளர் சேவை மையத்தை 011 7267864 என்ற இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம். 

நிபந்தனைகளுக்கு உட்பட்டது. விலை தள்ளுபடி சலுகையானது Galaxy Z Fold8 Ultra (12+256GB) மாதிரிக்கு மட்டுமே பொருந்தும். இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டு முறை பயன்படுத்தக்கூடிய திரை மாற்றும் சலுகையை 2027 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் செயல்படுத்தப்பட (Activate) வேண்டும். (அன்று முதல் 24 மாதங்களுக்கு செல்லுபடியாகும்). இலவச Data சலுகையை 2026 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செயல்படுத்தப்பட வேண்டும்.


MOST READ

காணொளி
ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

Mobitel 1278