Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
2026 ஆம் ஆண்டுக்கான Euromoney விருதுகளில், இலங்கையின் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிறந்த வங்கி மற்றும் SMEகளுக்கான சிறந்த வங்கி ஆகிய இரட்டை கௌரவத்தை

Aug 17, 2026 - 04:25 PM

2026 ஆம் ஆண்டுக்கான Euromoney விருதுகளில், இலங்கையின் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிறந்த வங்கி மற்றும் SMEகளுக்கான சிறந்த வங்கி ஆகிய இரட்டை கௌரவத்தை
Mobitel Inner 1278

Euromoney Awards for Excellence 2026 விருதுகளில் இரட்டை வெற்றியை செலான் வங்கி பதிவுசெய்துள்ளது. இலங்கையின் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிறந்த வங்கி மற்றும் SMEகளுக்கான சிறந்த வங்கி என மிகவும் மதிப்புமிக்க இரண்டு தேசிய அளவிலான விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. 

Euromoney ஆனது உலகளாவிய வங்கித்துறை, மூலதனச் சந்தைகள் மற்றும் நிறுவன நிதியியல் துறைகளை மையமாகக் கொண்டு செயற்படும் முன்னணி சர்வதேச நிதியியல் வெளியீடு மற்றும் சந்தை நுண்ணறிவு வழங்குநர் ஆகும். Euromoney வழங்கியுள்ள இந்த அங்கீகாரம், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதிலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை (SMEகள்) வலுப்படுத்துவதிலும் செலான் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

2025 ஆம் ஆண்டுக்கான Euromoney விருதுகளில் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிறந்த வங்கி விருதை வென்ற செலான் வங்கி, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் இக் கௌரவத்தை தக்கவைத்துள்ளது. இவ்விருது, தனிநபர்கள் மற்றும் வணிகங்கள், தமது வளர்ச்சி மற்றும் வருமானத்தை மேலும் அதிகரிக்க உதவும் வகையில், வங்கியின் நிபுணத்துவ ஆதரவு மற்றும் டிஜிட்டல் தளங்கள் நம்பகமான வகையில் செயற்பட்டு வருவதை மீண்டும் நிரூபிக்கின்றது. 

Euromoney விருதுகளில் பெற்றுள்ள இந்த இரட்டை கௌரவம், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்குவதில் வங்கியின் அர்ப்பணிப்புக்கும், நாடளாவிய ரீதியில் SMEகளுக்கு வழங்கப்படும் விரிவான ஆதரவுக்கும் சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரத்தை எடுத்துக்காட்டுகிறது. டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய வங்கிச் சேவைகள் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்கும் இவை வலுச்சேர்க்கின்றன. 

வங்கிக்கு கிடைத்துள்ள இந்த விருதுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, “இந்த இரட்டை கௌரவம் செலான் வங்கிக்கு பெருமைமிக்க மைல்கல் என்பதுடன் அர்த்தமுள்ளதும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்டதுமான வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கையின் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிறந்த வங்கி என அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், SMEகளுக்கான சிறந்த வங்கி என்ற விருதையும் பெற்றுள்ளமை உண்மையான மதிப்பை உருவாக்கும் வகையில் எமது ஊழியர்கள் மற்றும் கட்டமைப்புகளில் நாம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முதலீடுகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்.” என்றார். 

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள செலான் வங்கிக்கு, SMEகளுக்கான சிறந்த வங்கி என்ற விருது குறிப்பிடத்தக்க சாதனையாகும். SME துறையை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான முயற்சிகளின் பலனாக, செலான் வங்கியின் SME கடன் தொகுப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் இந்த அங்கீகாரத்திற்கான முக்கிய காரணியாக அமைந்துள்ளது. 

SMEகள் எதிர்கொள்ளும் பிணையப் பற்றாக்குறை, அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான வரையறுக்கப்பட்ட நிபுணத்துவம் போன்ற குறிப்பிட்ட சவால்களிற்கு தீர்வு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு நிதிச் சேவைகள் மூலம் இந்த வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் லிமிடெட் (NCGIL) உடனான கூட்டாண்மையின் கீழ், கடன் வழங்கும் தீர்மானங்களில் வணிகத்தின் செயல்றிறன் மற்றும் காசுப்பாய்ச்சலிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மேலும், பெண் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புத் தீர்வுகள் ஊடாக வங்கிச் சேவையைப் பெறும் நபர் யாராக இருந்தாலும் ஒரே சீரான சேவை அனுபவம் உறுதிசெய்யப்படுகிறது. 

வங்கியின் ‘Eco Solar Loan’ திட்டம், SMEகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான நிதியுதவியை வழங்குகிறது. கூட்டாண்மைகளின் ஆதரவுடன், நியாயமான விலையில் சூரிய மின்சக்தி முறைமைகளையும் இத்திட்டம் வழங்குகிறது. மேலும், Export Expert திட்டத்தின் ஊடாக ஏற்றுமதி நடைமுறைகள், ஆவணப்படுத்தல் மற்றும் சந்தை அணுகல் தொடர்பான நடைமுறை வழிகாட்டலுடன் நிதியுதவியும் ஒருங்கிணைக்கப்பட்டு, கொழும்பின் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் ஒன்றான புறக்கோட்டையில் அமைந்துள்ள பிரத்தியேக Trade Hub (வர்த்தக மையம்) மூலமாக வணிகங்களுக்கு இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. 

வங்கியின் சேவைகளின் தொகுப்பு விரிவடைந்து வரும் அதேவேளை, அதற்கேற்ப அதன் டிஜிட்டல் முதலீடுகளும் தடையின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன. செலான் வங்கியின் E-KYC செயல்முறை மூலம் SME வாடிக்கையாளர்கள் விரைவாகவும் உடனடியாகவும் கணக்குகளை திறக்கவும், கடன் சுயவிவரத்தை சரிபார்க்கவும் முடிகிறது. மேலும் Merchant Portal, இணையத்தளம் அல்லது online shopping cart இல்லாத வர்த்தகங்களுக்கும் இணையவழிக் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இது வங்கியின் Internet Payment Gateway மற்றும் Pay Direct சேவைகளுக்கு மேலதிகமான வசதியாக அமைகிறது. 2025 ஆம் ஆண்டில், e-commerce வர்த்தகர்களுக்கான Google Pay acquirer சேவை வசதியை இலங்கையில் அறிமுகப்படுத்திய முதல் வங்கியாகவும் செலான் வங்கி திகழ்ந்தது. 

செலான் வங்கிக்கு கிடைத்துள்ள இந்த இரட்டை கௌரவம், வாடிக்கையாளர்கள் எவ்வாறு அல்லது எங்கு வங்கிச் சேவைகளைப் பெற்றுக்கொண்டாலும், ஒரே சீரான தரத்திலான சேவையை வழங்குவதில் வங்கி கொண்டுள்ள தெளிவான கவனத்தை எடுத்துக்காட்டுகிறது. 

Omnichannel வாடிக்கையாளர் உறவுகள் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் chatbot அடிப்படையிலான தொடர்பாடல்கள் மூலம் டிஜிட்டல் மற்றும் நேரடி சேவைத் தளங்களில் வழங்கப்படும் சேவைகள் ஒரே தரநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நிகழ்நேர நற்பெயர் முகாமைத்துவக் கருவிகள், மும்மொழி கிளை கருத்துத் தெரிவிப்புத் தளங்கள் மற்றும் 24/7 தொடர்பு மையம் உள்ளிட்ட தொடர்ச்சியான பின்னூட்டல் வழிமுறைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை முறையாகக் கண்காணித்து அவற்றுக்கு பதிலளிக்க வங்கிக்கு உதவுகின்றன. 

செலான் வங்கி, தனது SME வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு மற்றும் சந்தை ஈர்ப்பை உயர்த்துவதற்காகவும் முதலீடு செய்துள்ளது. அத தெரண உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ‘ஒப பா நகென மக அப இன்னே’ தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொடர் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, 60க்கும் மேற்பட்ட SME தொழில்முனைவோரின் பயணங்களை காட்சிப்படுத்தியது. பரந்தளவிலான இந்த ஊடக வெளிப்பாடு, நிதியுதவிக்கு அப்பாற்பட்ட மதிப்பை SMEகளுக்கு வழங்குவதுடன், இச் சிறிய வர்த்தகங்கள் தமது சொந்த வர்த்தகநாம அங்கீகாரத்தை உருவாக்குவதற்கும் ஆதரவளிக்கிறது. 

சர்வதேச Euromoney Awards for Excellence 2026 விருதுகளில் செலான் வங்கிக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்து வரும் ஒரு வங்கியின் செயற்பாடுகளுக்கு கிடைத்துள்ள சுயாதீனமான அங்கீகாரமாகும். அத்துடன், இலங்கையின் SME துறைக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சேவைகள் மற்றும் தொடர்ச்சியான ஆதரவின் ஊடாக செலான் வங்கி வெளிப்படுத்தி வரும் நீடித்த அர்ப்பணிப்புக்கும் இது சான்றாகும்.


MOST READ

காணொளி
ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

Mobitel 1278